SELANGOR

செந்தோசா தொகுதியில்  பெண்கள் திறன் மேம்பாட்டு பிரிவு நடத்தும் நவீன விவசாயம் பயிற்சி பட்டறை 

ஷா ஆலம், பிப் 22: பெண்கள் திறன் மேம் பாடுகளில் நவீன விவசாயத்தின்  வழி கூடுதல்  குடும்ப வருமானம் மற்றும் குடும்ப செலவை  குறைப்பது தொடர்பான பயிற்சி பட்டறை ஒன்றை செந்தோசா தொகுதியின் வனிதா பெர்டாயா சிலாங்கூர் ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிகழ்வுக்குச் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் அவர்கள் சிறப்பு வருகை புரிவார் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வு செந்தோசா தொகுதி சேவை மையத்திற்கு அருகே அமைந்துள்ள செந்தோசா சிடிசி (CDC) எனும் இடத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி நடைபெறும்.

இப்பட்டறையில் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொள்ளலாம். மேலும், இதில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு மதிய உணவும் இலவசமாக வழங்கப்படும்.

அதுமட்டுமில்லாமல், இப்பட்டறை முடிவடைந்த பிறகு கலந்து கொள்ளும் பெண்களின் வணிக தொடர்பான நடவடிக்கைகளை இந்நிறுவனம் மேற்பார்வையிடும் என செந்தோசா தொகுதியின் வனிதா பெர்டாயா சிலாங்கூரின் தலைவர் குமாரி ஏஞ்சலின் கூறினார்.

இத்திட்டத்தின் நோக்கம் பெண்களுக்கு கூடுதல் வருமானம் ஈட்டுவதற்கு வாய்ப்பை வழங்குவதே ஆகும்.இதில் பங்கேற்க விருப்பம் உள்ள பெண்கள் நேரடியாக 016-9162553 ( குமாரி ஏஞ்சலின்) என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பலாம்.


Pengarang :