SELANGOR

மடாணி ரக்யாட் திட்டத்தை முன்னிட்டு ஒரு நாளைக்கு 2,000 கோழிகள் விற்பனை

ஷா ஆலம், பிப் 22: கோலா சிலாங்கூரில் நாளை தொடங்கும் மடாணி ரக்யாட் திட்டத்தை முன்னிட்டு எஹ்சான் ரஹ்மா விற்பனையில் ஒரு நாளைக்கு மொத்தம் 2,000 கோழிகள் விற்கப்படும்.

தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடைபெறும் இந்த விற்பனை, இந்நிகழ்ச்சிக்கு வருபவர்களை ஈர்க்கும் ஓர் அம்சமாக இருக்கும் என சிலாங்கூர் வேளாண்மை வளர்ச்சிக் கழகத் (பிகேபிஎஸ்) தலைமை நிர்வாக அதிகாரி கூறினார்.

“இம்முறை 2,000 கோழிகள், 800 மீன் பாக்கெட்டுகள், 800 இறைச்சி பாக்கெட்டுகள், 1,200 முட்டை தட்டுகள், 1,200 அரிசி பேக்கட்டுகள் மற்றும் 144 எண்ணெய் பாட்டில்கள் கொண்டு வருவோம். இவை அனைத்தும் நாளை தொடங்கி மூன்று நாட்களுக்குக் கிடைக்கும்.

“இம்முறை சிறப்பு என்னவென்றால், நாங்கள் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை விற்பனை செய்கிறோம். இதனால் மக்கள் அன்றாடத் தேவைகளை எளிதாகவும் வசதியாகவும் பெற முடியும்,” என்று டாக்டர் முகமட் கைரில் முகமட் ராஸி கூறினார்.

பிஸ்கட், சாஸ், சோயா சாஸ், மிளகாய் போன்ற பல்வேறு பொருட்களுடன் கூடுதலாக 1,700 ஒரு கிலோ எண்ணெய் பாக்கெட்டுகளையும் பிகேபிஎஸ் வழங்குகிறது.

“நாளை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை கோலா சிலாங்கூர் விளையாட்டு வளாகத்தில் மடாணி ரக்யாட் திட்டத்தை முன்னிட்டு எஹ்சான் ரஹ்மா விற்பனையில் பல்வேறு அடிப்படை பொருட்களை மலிவு விலையில் பெறுவோம்” என்று அவர் கூறினார்.


Pengarang :