NATIONAL

 செலங்கா செயலி தரவுகள் பாதுகாப்பானவை 

ஷா ஆலம், மார்ச் 1: செலங்கா செயலி தரவுத்தளத்தில் சேமிக்கப்பட்டுள்ள பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் கசியாமல் பாதுகாப்பாக இருக்கும்.

இணையத்திலிருந்து தரவு மீறல் நடந்ததாகக் குற்றஞ் சாட்டப் பட்டாலும் பயனர் பாதுகாப்பு மற்றும் தனியுரிமைக்குத் தொடர்ந்து முன்னுரிமை அளிக்கப்படுகிறது என அச்செயலி நிறுவனம் தெரிவித்தது.

“குறிப்பிட்ட தரவு எங்கள் தரவுத்தளத்தில் இருந்தவை அல்ல என்பதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம். செலங்காவில் சேமிக்கப்பட்டுள்ள தனிப்பட்ட தரவு பாதுகாப்பாக உள்ளது.

“பயனர்களின் தரவின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சிறந்த நடவடிக்கைகளை நாங்கள் தொடர்ந்து செயல்படுத்துகிறோம் மற்றும் பராமரிக்கிறோம் என்பதை உறுதியளிக்க விரும்புகிறோம்” என்று “Selangkah Ventures Sdn Bhd“ தெரிவித்தது.

பிப்ரவரி 26 அன்று வெளியாகிய தி ஸ்டாரின் அறிக்கையைத் தொடர்ந்து இந்த பதிவி வெளியிடப்பட்டது. அதாவது குறிப்பிட்ட செயலியில் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான பயனர்களை உள்ளடக்கிய தரவு விற்பனை நடந்ததாகக் தி ஸ்டார் கூறியது.

மேலும், தரவு மூலமானது கோவிட்-19 தடுப்பூசி தொடர்பான 10,027 கோப்புகளை உள்ளடக்கியது, இதன் விலை US$1,000 (RM4,761) என பட்டியலிடப்பட்டுள்ளது.

இந்த செயலி 2021 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு, கோவிட்-19 தொற்றுநோயாளிகளின் போது தொடர்புகளை கண்டறிய உதவியது மற்றும் சிலாங்கூர் அரசாங்கத்தின் கீழ் பல்வேறு திட்டங்களை அணுகுவதற்கு அதன் செயல்பாடு இப்போது விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.


Pengarang :