NATIONAL

மோசடி கும்பலால் பாதிக்கப்பட்ட 326 மலேசியர்கள் மீட்பு

கூச்சிங், மார்ச் 1: வெளிநாட்டில் வேலை வாய்ப்பு வாங்கி தருவதாகக் கூறி ஏமாற்றிய மோசடி கும்பலால் பாதிக்கப்பட்ட 326 மலேசியர்கள் 2021 முதல் பிப்ரவரி 23 வரை மீட்கப்பட்டனர், 133 பேர் இன்னும் வெளிநாட்டில் சிக்கித் தவிக்கின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் கம்போடியா, மியான்மர், தாய்லாந்து மற்றும் லாவோஸ் போன்ற நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்று புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் துணை இயக்குனர் (விசாரணை/சட்டம்) டத்தோ ருஸ்டி முகமட் இசா கூறினார்.

“ஆய்வில், 73 சதவீதம் பேர் மோசடி செய்பவர்களாகவும், 12 சதவீதம் பேர் வாடிக்கையாளர் சேவை அதிகாரிகளாகவும், எட்டு சதவீதம் பேர் சூதாட்ட விடுதிகளில் வேலையாட்களாகவும், ஏழு சதவீதம் பேர் சமையல்காரர்கள் போன்ற பல்வேறு பணிகளுக்கு கொண்டு செல்லப்பட்டவர்கள்,” என்று அவர் கூறினார்.

பாதிக்கப்பட்டவர்களை ஏமாறுவதற்கு முக்கிய காரணிகளில் ஒன்று லாபகரமான சம்பள சலுகைகள் ஆகும் என்று ருஸ்டி கூறினார். அதுமட்டுமில்லாமல், அவர்கள் முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் வெளிவரும் வேலைவாய்ப்பு விளம்பரங்களால் ஈர்க்கப் படுகின்றனர் என்றார்.

– பெர்னாமா


Pengarang :