SELANGOR

ஒன்பது மாவட்டங்களில் மாணவர்களிடையே இணைய பாதுகாப்பு விழிப்புணர்வை அதிகரிக்கும் திட்டம்

ஷா ஆலம், மார்ச் 8: இந்த ஆண்டு பள்ளி மாணவர்களிடையே இணைய பாதுகாப்பு விழிப்புணர்வை அதிகரிக்கும் திட்டம் சிலாங்கூரில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்.

மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம், தேசிய மக்கள் தொகை மற்றும் குடும்ப மேம்பாட்டு வாரியம் ஆகியவற்றுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் பாதுகாப்பான சமூகத் திட்டம் ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு கட்டம் கட்டமாகத் தொடங்கப்படும் என மகளிர் மேம்பாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் அன்பால் சாரி தெரிவித்தார்.

“மாணவர்களுக்கு இணைய பாதுகாப்பு, பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பற்ற தொடுதல் தொடர்பான விழிப்புணர்வு வழங்கப்படும். மேலும், பாதுகாப்பற்ற தொடுதல் அல்லது பாலியல் துன்புறுத்தல் ஏற்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்ணைத் பள்ளிச் சுவரோவியத்தில் இணைப்பது இத்திட்டத்தில் அடங்கும்.

“சமூக நலத் துறை அளவில், இந்தத் திட்டம் கடந்த ஆண்டு ஒரு மாவட்டத்தில் தொடங்கப்பட்டு, இவ்வாண்டு சிலாங்கூரில் ஒன்பது மாவட்டங்களில் தொடரும்.


Pengarang :