NATIONAL

மலேசியாவில் முதலீடு செய்ய ஜெர்மனிய வர்த்தகர்களுக்குப் பிரதமர் அழைப்பு

பெர்லின், மார்ச் 12- தென்கிழக்காசியாவில் கேந்திர முக்கியத்துவம்
வாய்ந்த இடமாகவும் தேவையான அடிப்படை வசதிகளைக் கொண்ட
நாடாகவும் விளங்கும் மலேசியாவை தேர்வுக்குரிய முதலீட்டு மையமாக
பயன்படுத்திக் கொள்ளும்படி ஜெர்னிய வணிகத் துறையினரை பிரதமர்
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.

ஐரோப்பிய ஒன்றியத்தைப் பொறுத்த வரை ஜெர்மனி மலேசியாவின்
மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக விளங்கி வருவதோடு 1,500 கோடி
அமெரிக்க டாலரை (7,024 கோடி வெள்ளி) அது முதலீடு செய்துள்ளது
என்று அவர் சொன்னார்.

நேற்று, பெர்லினில் ஜெர்மனி பிரதமர் ஓலாஃப் ஷோல்ஸ்சுடன் கூட்டாக
நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

இன்ஃபினியன் டெக்னோலோஜிஸ் ஏ.ஜி. உள்பட ஜெர்னியின் பல பிரசித்தி
பெற்ற நிறுவனங்கள் மலேசியாவை தங்களின் முக்கியத் தளமாகவும்
பயிற்சி மையமாகவும் கொண்டுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.

ஆகவே, வர்த்தக மற்றும் முதலீட்டு ரீதியாக மட்டுமின்றி அனைத்து
துறைகளையும் உள்ளடக்கிய இரு வழி உறவுகளிலும் ஜெர்மனியுடன்
மேலும் விரிவான ஒத்துழைப்பை மலேசியா எதிர்பார்க்கிறது என்று அவர்
குறிப்பிட்டார்.

மாணவர்களுக்குப் பயற்சியளிக்கும் விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த
மலேசியா ஆர்வம் காட்டி வருகிறது என்று நிதியமைச்சருமான அவர்
சொன்னார். தற்போது ஜெர்னியின் பல பகுதிகளில் சுமார் 1,000
மாணவர்கள் பல்வேறு துறைகளில் பயிற்சிகளைப் பெற்று வருவதையும்
அவர் சுட்டிக்காட்டினார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பசுமை எரிசக்தித் துறைகளில் புதிய
முதலீடுகளைச் செய்ய பெர்லின் கொண்டுள்ள ஆர்வத்தை தாங்கள்
வரவேற்பதாகவும் அன்வார் கூறினார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை எங்களின் தற்போதைய பிரதான இலக்காக
உள்ளது. சோலார் எரிசக்தி மற்றும் பசுமைத் எரிசக்தியில் நாங்கள்
போதுமான ஆற்றலைக் கொண்டுள்ளோம். இந்த எரிசக்தியை ஏற்றுமதி
செய்யும் திறனையும் நாங்கள் கொண்டுள்ளோம் என்றார் அவர்.


Pengarang :