NATIONAL

‘பாடு‘ தரவு தளத்தில் 43.2 லட்சம் பேர் தகவல்களைப் புதுப்பித்துள்ளனர்- சிலாங்கூரில் 650,000 பேர் பதிவு

கோலாலம்பூர், மார்ச் 12- நாட்டிலுள்ள 3 கோடியே 8 லட்சம் மக்களில் 43 லட்சத்து 20 ஆயிரம் பேர் ‘பாடு‘ எனப்படும் முதன்மை தரவு தளத்தில் நேற்று வரை தங்கள் விபரங்களைப் புதுப்பித்துள்ளனர்.

சிலாங்கூரில் மிக அதிகமாக 650,000 பேரும் சரவா மாநிலத்தில் 570,000 பேரும் ஜோகூரில் 410,000 பேரும் பேராக்கில் 390 பேரும் சபாவில் 360,000 பேரும் கெடாவில் 290,000 பேரும் இந்த மையத்தில் பதிந்து கொண்டுள்ளதாகப் ‘பாடு‘ அதிகாரப்பூர்வப் பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ள தரவுகள் காட்டுகின்றன.

மேலும், கோலாலம்பூர் மற்றும் கிளந்தானில் தலா 280,000 பேரும் பகாங்கில் 240,000 பேரும் பினாங்கில் 230,000 பேரும் திரங்கானுவில் 230,000 பேரும் நெகிரி செம்பிலானில் 180,000 பேரும் மலாக்காவில் 120,000 பேரும் புத்ராஜெயாவில் 2 லட்சம் பேரும் லபுவானில் 1 லட்சம் பேரும் இந்த தளத்தில் பதிவு செய்துள்ளனர்.

இந்த ‘பாடு‘ தளத்தில் இன்னும் பதிவு செய்யாதவர்கள் இறுதி நாளான மார்ச் 31ஆம் தேதிக்குள் தங்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். அவர்கள் https://www.padu.my என்ற அகப்பக்கம் வாயிலாக அல்லது அருகிலுள்ள பாடு முகப்பிடங்களில் பதிவு நடவடிக்கையை மேற்கொள்ளலாம்.


Pengarang :