NATIONAL

சாலை விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் உயிரிழந்தனர்

குவாந்தான், மார்ச் 13: நேற்று லூயிட், மாரான் அருகே ஜாலான் குவாந்தன்-கோலாலம்பூர் கிலோமீட்டர் (கிமீ) 67இல் நடந்த விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் அவரவர் ஓட்டிச் சென்ற வாகனங்கள் எதிர்- எதிரே மோதி  கொண்டதில்  உயிரிழந்தனர்.

கம்போங் பெரமுவைச் சேர்ந்த இஸ்மானிசம் சுல்கானைன் அஸ்மி (22) மற்றும் ஃபெல்க்ரா ஸ்ரீ மக்முரைச் சேர்ந்த நிக் முகமட் சைனுடின் எம்.பாகி (38) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மாரான் மாவட்ட காவல்துறைத் தலைவர் டிஎஸ்பி முகமது ஜம்ரி முகமது ஜாபர் தெரிவித்தார்.

மதியம் 12.30 மணியளவில் குவாந்தனிலிருந்து கோலாலம்பூருக்குச் இஸ்மானிசம் ஓட்டிச் சென்ற இசுஸு லாரி சம்பவ நடந்த இடத்தை அடைந்த போது கட்டுப்பாட்டை இழந்ததின் விளைவாக இச்சம்பவம் நடந்ததாக அவர் கூறினார்.

“இஸ்மானிசம் ஓட்டிச் சென்ற லாரி எதிர் பாதையில் நுழைந்து நிக் முகமட் சைனுடின் ஓட்டிச் சென்ற ஹினோ வகை லாரி மீது மோதியதாக நம்பப்படுகிறது.

“பாதிக்கப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மற்றும் அவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக ஜெங்கா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டன,” என்று அவர் கூறினார்.

சாலை போக்குவரத்து சட்டம் (ஏபிஜே) 1987 பிரிவு 41(1)ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

– பெர்னாமா


Pengarang :