NATIONAL

எட்டு பகுதிகளில் வெப்பநிலை எச்சரிக்கை – மெட்மலேசியா

கோலாலம்பூர் மார்ச் 14: தீபகற்ப மலேசியாவின் வடக்கில் உள்ள எட்டு பகுதிகளில் வெப்பநிலை தொடர்பாக மலேசிய வானிலை ஆய்வுத் துறை (மெட்மலேசியா) எச்சரிக்கையை விடுத்துள்ளது.

கெடாவில் (பாடாங் தெராப், கோத்தா ஸ்டார், பொகோக் சேனா, பென்டாங், சிக், பாலிங்), பேராக்கில் (உலு பேராக்) மற்றும் பெர்லிஸ் ஆகிய பகுதிகள் இதில் அடங்கும் என மெட்மலேசியா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்கு ஒரு பகுதியின் அதிகபட்ச தினசரி வெப்பநிலை 35 முதல் 37 டிகிரி செல்சியஸ் அடையும் போது வெப்ப எச்சரிக்கை நிலை அறிவிக்கப்படுகிறது.

வெப்ப வானிலை குறித்த சமீபத்திய தகவலுக்குப் பொதுமக்கள் www.met.gov.my ஐப் நாடவும்.

– பெர்னாமா


Pengarang :