NATIONAL

கெவின் மோராய்ஸ் கொலை வழக்கு – அறுவருக்கு எதிரான தூக்குத் தண்டனையை கூட்டரசு நீதிமன்றம் உறுதிப்படுத்தியது

ஷா ஆலம், மார்ச் 14 – ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் அரசு துணை
வழக்கறிஞரான டத்தோ அந்தோணி கெவின் மோராய்சை கொலை செய்த
வழக்கில் அறுவருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை மேல்
முறையீட்டு நீதிதின்றம் இன்று மறுவுறுதிப்படுத்தியது.

நீதிபதி டத்தோ ஹடாரியா சைட் இஸ்மாயில் தலைமையிலான
மூவரடங்கிய அமர்வு இந்த முடிவினை ஏகமனதாக எடுத்தது. டத்தோஸ்ரீ
அகமது ஜைடின் இப்ராஹிம் மற்றும் டத்தோ அஸ்மி அரிபின் ஆகியோர்
இக்குழுவில் இடம் பெற்ற இதர இரு நீதிபதிகளாவர்.

முன்னாள் உடற்கூறு நிபுணர் கர்னல் டாக்டர் ஆர்.குணசேகரன் (வயது 61),
கடன் வழங்கும் தொழிலில் ஈடுபட்டு வந்த எஸ்.ரவிச்சந்திரன் (வயது 53),
வேலை இல்லா நபர்களான ஆர்.டினேஸ்வரன் (வயது 32), ஏ.கே.டினேஷ்
குமார் (வயது 31), எம்.விஸ்வநாத் (வயது 34), எஸ். நிமலன் (வயது 31)
ஆகியோரே அந்த ஆறு குற்றவாளிகளாவர்.

டத்தோ கெவின் மோராய்சை கொலை செய்த வழக்கில் அந்த
அறுவருக்கும் உயர் நீதிமன்றம் கடந்த 2020 ஜூலை மாதம் 10ஆம் தேதி
மரண தண்டனை விதித்தது.

கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி காலை 7.00 மணிக்கும்
இரவு 8.00 மணிக்கும் இடையே ஜாலான் டூத்தாமாஸ் ராயா செந்துல்
மற்றும் சுபாங் ஜெயா, ஜாலான் யுஎஸ்ஜே 1/6டி எனும் முகவரியில்
இக்குற்றத்தைப் புரிந்ததாக அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.


Pengarang :