NATIONAL

இந்தியாவின் செம்பனை இறக்குமதி 36 சதவீதம் சரிவு

புதுடில்லி, மார்ச் 14 – பிப்ரவரியில் இந்தியாவின் செம்பனை இறக்குமதி 36 சதவீதம் சரிந்தது. அந்நாட்டின் ஒட்டுமொத்த சமையல் எண்ணெய் இறக்குமதி தொடர்ந்து இரண்டாவது மாதமாகக் குறைந்துள்ளது.

இந்தியா கடந்த மாதம் 497,824 டன் செம்பனை இறக்குமதி செய்தது. ஆனால், ஜனவரியில் அது 782,983 டன்னாக இருந்தது என தொழில்துறை குழுவான Solvent Extractors’ Association of India (SEA) வெளியிட்ட தரவு காட்டுகிறது.

இந்த மாதத்தில் மலேசியாவிலிருந்து இந்தியா 192,499 டன்கள் இறக்குமதி செய்தது. இதில் 182,499 டன்கள் கச்சா எண்ணெய் (CPO), 7,500 டன்கள் RBD பாம் ஓலின் மற்றும் 2,500 டன்கள் பாம் கர்னல் எண்ணெய் (CPKO) ஆகியவை ஆகும்.

ஜனவரியில், இந்தியா 283,123 டன் CPO, 15,785 டன் RBD மற்றும் 5,430 டன் CPKO ஆகியவற்றை மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்தது குறிப்பிடத்தக்கது.

பிப்ரவரியில் ஒட்டுமொத்த இந்திய சமையல் எண்ணெய் இறக்குமதி 967,852 டன்களாக இருந்தது. இது ஜனவரியிலிருந்து சுமார் 19 சதவீதம் சரிவைக் குறிக்கிறது.

– பெர்னாமா


Pengarang :