NATIONAL

காற்றின் தரம் சபா கிமானிசில்   ஆரோக்கியமற்றதாக  மாறியுள்ளது

 பாப்பார், மார்ச் 14: சபாவில் இன்று காலை 11 மணி நிலவரப்படி பாப்பார் மாவட்டத்தில் உள்ள கிமானிஸ் என்ற பகுதியில்  காற்றின் தரம் ஆரோக்கியமற்றதாக மாறியுள்ளது.

மேலும், 62 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிமானிஸ், காற்று மாசுக் குறியீட்டைப் (IPU)  155 தாக பதிவு செய்துள்ளது. இது ஆரோக்கியமற்ற பதிவாகும் என சுற்றுச்சூழல் துறை இணையம் மூலம் அறிவித்துள்ளது.

மேலும், பாப்பார் கடந்த சில வாரங்களாக வறட்சி நிலையைக் கொண்டிருப்பதால் பாப்பார் மாவட்ட பேரிடர் மேலாண்மை குழு (ஜேபிபிடி) நேற்று முதல் அம்மாவட்டத்தைப் பேரிடர் பகுதியாக அறிவித்தது.

வெப்பமான காலநிலையில் காற்றின் தரத்தை மோசமாக்கும் திறந்த வெளியில் எரிக்கும் நடவடிக்கையை தவிர்க்குமாறு சுற்றுச்சூழல் துறை மக்களுக்கு நினைவூட்டுகிறது.

இதற்கிடையில், இன்று காலை 11 மணி நிலவரப்படி, நாடு முழுவதும் உள்ள 10 விமான நிலையங்கள் நல்ல காற்றின் தர நிலையைக் காட்டியதாகவும், 57 நிலையங்கள் மிதமானதாகவும், ஒன்று ஆரோக்கிய மற்றதாகவும், அதாவது கிமானிஸ் என்று சுற்றுச்சூழல் துறையின் முகநூல் தெரிவித்துள்ளது.

– பெர்னாமா


Pengarang :