NATIONAL

ஐடில்பித்ரி கொண்டாட்டத்தை முன்னிட்டு இலவச மொத்த குப்பை சேகரிப்பு சேவை

ஷா ஆலம், மார்ச் 20: ஐடில்பித்ரி முன்னிட்டு மொத்த குப்பைகளை மக்கள் எளிதாக அகற்றும் வகையில் ‘ரோல் ஆன் ரோல் ஆஃப்’ (ரோரோ) தொட்டிகளை உலு சிலாங்கூர் நகராண்மை கழகம் இலவசமாக வழங்குகிறது.

மாவட்டம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் கடந்த திங்கள் கிழமை முதல் ஏப்ரல் 6-ம் தேதி வரை மூன்று டன் கொள்ளளவு கொண்ட ரோரோ தொட்டிகள் வைக்கப்படும் என்று ஊராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

“ரோரோ தொட்டிகள் நிரம்பியதாக கண்டறியப்பட்டால் நிர்ணயிக்கப் பட்ட காலத்திற்கு முன்னதாக அகற்றப்படும். ஒவ்வொரு பகுதியிலும் எட்டு நாட்களுக்கு இந்த சேவை இலவசமாக வழங்கப்படுகிறது.

“குடியிருப்பாளர்களுக்கு எளிதாக மொத்த கழிவுகளை அகற்ற வழங்கப்பட்ட ரோரோ தொட்டிகளில் மொத்த கழிவுகளை வீசுவதன் மூலம் அவர்கள் ஒத்துழைப்பார்கள் என்று உலு சிலாங்கூர் நகராண்மை கழகம் நம்புகிறது,” என்று முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது.

வீசக்கூடிய மொத்தக் கழிவுகளில் பழைய தளவாடப் பொருட்களில், பயன்படாத மெத்தைகள், அலமாரிகள், நாற்காலிகள் மற்றும் மின்சாதனப் பொருட்களும் அடங்கும் என்று எம்பிஎச்எஸ் மேலும் கூறியது.

“ரோரோ தொட்டிகளின் அட்டவணையை எம்பிஎச்எஸ் முகநூல் பக்கம் மூலம் சரிபார்த்து, ஏதேனும் கேள்விகள் இருந்தால் எம்பிஎச்எஸ் திடக்கழிவு மேலாண்மை மற்றும் பொது துப்புரவு துறையை 03-6064 1050 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டது.


Pengarang :