NATIONAL

5.69 மில்லியன் தரவுகள் பாடு அமைப்பு மூலம் புதுப்பிக்கப்பட்டுள்ளன

ஷா ஆலம், மார்ச் 20: திங்கட்கிழமை வரை நிர்வாகத் தரவு மூலத்தில் உள்ள 30.08 மில்லியன் தனிப்பட்ட தரவுகளில் மொத்தம் 5.69 மில்லியன் பாடு அமைப்பு மூலம் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

முகநூலில் உள்ள தகவல்களின் அடிப்படையில், சிலாங்கூரில் (0.86 மில்லியன்), சரவாக்கில் (0.70 மில்லியன்), ஜோகூரில் (0.58 மில்லியன்), பேராக்கில் (0.53 மில்லியன்) மற்றும் சபாவில் (0.48 மில்லியன்) என பாடுவில் தகவல் புதுப்பிப்புகள் செய்யப்பட்டுள்ளன. இதில் சிலாங்கூர் முதல் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

கெடாவில் (0.40 மில்லியன்), கிளந்தான் (0.38 மில்லியன்), கோலாலம்பூரில் (0.35 மில்லியன்), பகாங் மற்றும் பினாங்கில் தலா (0.31 மில்லியன்), திரங்கானுவில் (0.29 மில்லியன்) மற்றும் நெகிரி செம்பிலானில் (0.24 மில்லியன்) என பதிவாகியுள்ளன.

மேலும், மலாக்காவில் (0.16 மில்லியன்), பெர்லிஸில் (0.07 மில்லியன்), புத்ராஜெயா மற்றும் லாபுவானில் தலா (0.02) மில்லியன் எனப் பதிவாகியுள்ளன.

சமூகப் பொருளாதாரத்தைத் திட்டமிடுவதிலும், தேசியக் கொள்கைகளை இன்னும் விரிவாக ஒழுங்கமைப்பதிலும் அரசாங்கத்திற்கான முக்கிய ஆதாரமாகப் பாடு அமைப்பு உருவாக்கப்பட்டது.

இது அரசாங்கத்திற்கான ஒரு தரவு மூலமாகவும் உள்ளது, குறிப்பாக மக்களுக்கு மிகவும் வெளிப்படையான மற்றும் திறமையான முறையில் உதவிகளை வழங்குவதில் ஆகும். அதுமட்டுமில்லாமல், உதவிகள் வழங்குவதைக் கண்காணிக்கவும் பாடு உதவுகிறது.

இதுவரை பதிவு செய்து தங்கள் தரவை புதுப்பிக்காதவர்கள் மார்ச் 31 ஆம் தேதிக்குள் https://www.padu.gov.my என்ற இணைப்பு மூலமாகவோ அல்லது அருகில் உள்ள பாடு கவுண்டரிலோ பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


Pengarang :