NATIONAL

மக்களவையில் ஆறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன

கோலாலம்பூர், மார்ச் 22- நேற்றுடன் முடிவடைந்த மக்களவையின்
நான்காவது வாரத்தில் ஆறு மசோதாக்கள் குழு நிலையில்
அங்கீகரிக்கப்பட்டன.

அவற்றில் 2023ஆம் ஆண்டிற்கான சேவைகளுக்காகக் கூடுதல் செலவுத்
தொகையாக ஒருங்கிணைக்கப்பட்ட நிதியிலிருந்து 2,347 கோடியே 96
லட்சத்து 69 ஆயிரத்து 350 வெள்ளிக்கும் மேற்போகாத நிதியை மீட்பது
தொடர்பான 2024 துணை விநியோக மசோதாவும் அடங்கும்.

இது தவிர, பல்கலைக்கழக மற்றும் பல்கலைக்கழக கல்லூரி
(திருத்தப்பட்ட) மசோதா 2023, வெளிநாடுகளின் அதிகார வரம்பு சட்ட
மசோதா 2023, போலீஸ் (திருத்த) மசோதா 2024, மலேசிய நெடுஞ்சாலை
ஆணைய (ஒருங்கிணைக்கப்பட்ட)(திருத்தப்பட்ட) மசோதா, பரபஸ்பர
திருமண ஒப்பந்த மசோதா 2023 ஆகியவற்றுக்கும் இக்கூட்டத் தொடரில்
ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதற்கிடையே 2024ஆம் ஆண்டிற்கான வரையறுக்கப்பட்ட பங்காளித்துவ
(திருத்த) மசோதாவை முதல் வாசிப்புக்காக உள்நாட்டு வர்த்தக மற்றும்
வாழ்க்கைச் செலவின துணையமைச்சர் பவுஸியா சாலே
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

திரைப்படை தணிக்கை வாரியம் தொடர்பான உள்துறை அமைச்சர்
டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயிலும் அவை
உறுப்பினர்களுக்கு விளக்கமளித்தார். மக்களவைக் கூட்டம் எதிர்வரும் திங்கள்கிழமை மீண்டும் தொடரும்.


Pengarang :