ஷா ஆலம், மார்ச் 22: ஹரி ராயா ஐடில்பித்ரி கொண்டாட்டத்தை முன்னிட்டு சிலாங்கூர் மாநில அரசு ஊழியர்கள் ஒரு மாதச் சம்பளம் அல்லது குறைந்தபட்சம் RM1,000 சிறப்பு நிதி உதவி (BKK) பெறுவார்கள்.

மேலும், 45 மில்லியன் ரிங்கிட் நிதி அடங்கிய ரம்ஜான் மஹாபா உதவி ஏப்ரல் 8 ஆம் தேதி விநியோகிக்கப்படும் என்று டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

“தற்போது SUK இல் (மாநில அரசு நிர்வாக கட்டிடம்) பணியாற்றும் அனைத்து மாநில அரசு ஊழியர்களுக்கும் ஒரு மாதச் சம்பளம் அல்லது குறைந்தபட்சம் RM1,000 வழங்கப்படும்.

“SUK இன் கீழ் பணியாற்றும் மத்திய அரசின் அரசு ஊழியர்களுக்கும் இந்த உதவி வழங்கப்படும்” என்று அவர் இன்று நடந்த ரம்ஜான் மடாணி மஹாப்பா நிகழ்வில் கூறினார்.

கிராம சமூக நிர்வாகக் குழுவின் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் உட்பட அரசால் நியமிக்கப்பட்ட சமூகத் தலைவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும் என அமிருடின் கூறினார்.

அதுமட்டுமில்லாமல், கிராமத் தொடர்பு அதிகாரிகள் மற்றும் இந்திய சமூகத்தின் தலைவர்கள், வனிதா பெர்டாயா சிலாங்கூர் மேற்பார்வையாளர், சிலாங்கூர் இளைஞர் அணிவகுப்பாளர்கள் மற்றும் கவுன்சிலர்களும் இந்த உதவி தொகையைப் பெறுவார்கள் என அவர் விளக்கினார்.

இதற்கிடையில், நஜிர்கள், இமாம்கள், பிலாக்ஸ் மற்றும் சியாக் போன்ற மசூதிகளை வழிநடத்துபவர்கள் மற்றும் அல்-குரான் மற்றும் ஃபர்து ஐன் (கஃபா) வகுப்பு ஆசிரியர்களுக்கு RM500 உதவி வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.