NATIONAL

சிலாங்கூர் குடிமக்கள் பாடு கவுண்டர் சேவையை நன்கு  பயன்படுத்திக் கொள்கிறார்கள்

ஷா ஆலம், மார்ச் 27: சிலாங்கூர் மாநில குடிமக்கள் மார்ச் 31 ஆம் தேதிக்குள் பாடு அமைப்பில் தனிப்பட்ட தகவல்களை புதுப்பிக்க ஏற்பாடு செய்துள்ள கவுண்டர் சேவையை நன்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

தஞ்சோங் காராங் அம்னோ அலுவலகம், கோலா சிலாங்கூர் நகராண்மை கழகம் மற்றும் புஞ்சாக் பெர்டானாவில் உள்ள ஆலம் பெர்டானா பிளாட் @ஜோஹான் கோர்ட் ஆகிய இடங்களில் ஏற்பாடு செய்துள்ள கவுண்டர்களில் மக்கள் குவிந்ததாகச் சிலாங்கூர் மாநில மலேசிய புள்ளியியல் துறை நேற்று பக்கம் X இல் தெரிவித்துள்ளது.

கோம்பாக்கைச் சுற்றி மொத்தம் நான்கு கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளன, அதாவது முக்கிம் பத்து, என்எஸ்கே ரவாங் ஜெயா சூப்பர் மார்க்கெட், ஜெயண்ட் பத்து கேவ்ஸ் மற்றும் லோட்டஸ் ரவாங் ஆகிய இடங்கள் ஆகும். அங்கும் ஏராளமான பொதுமக்கள் வருகை புரிந்துள்ளனர்.

மார்ச் 31 வரை, மாநிலம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட கவுண்டர்கள் மக்கள் பதிவு செய்வதற்கு வசதியாகவும் உதவுவதற்கும் திறந்திருக்கும்.

விண்ணப்பதாரர் அடையாள அட்டை, குடும்ப உறுப்பினர்களின் அடையாள அட்டையின் நகல் மற்றும் வங்கிக் கணக்குத் தகவல்களையும் கொண்டு வருமாறு பொதுமக்களுக்கு நினைவூட்டப்படுகிறது.

நேற்றைய நிலவரப்படி, 8.09 மில்லியன் நபர்கள் தங்கள் தரவைப் புதுப்பித்துள்ளனர். இது இந்த நாட்டில் உள்ள 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் 36.8 சதவீதமாகும்.

மார்ச் 20 அன்று, பாடு அமைப்பில் தகவல்களை பதிவு செய்து புதுப்பிப்பதற்குக் குடியிருப்பாளர்களுக்கு உதவுவதற்கான முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்று டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.


Pengarang :