NATIONAL

ரஹ்மா அடிப்படை நன்கொடை (சாரா) திட்டத்திற்கு அரசாங்கம் இதுவரை RM210 மில்லியன் செலவிட்டுள்ளது

ஷா ஆலம், மார்ச் 27: ரஹ்மா அடிப்படை நன்கொடை (சாரா) திட்டத்தை வெற்றிகரமாக ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு மற்றும் தீவிர ஏழைகளுக்கு விநியோகிக்க அரசாங்கம் இதுவரை RM210 மில்லியன் செலவிட்டுள்ளது.

குடும்பத்தார்களுக்கு வழங்கும் உதவியின் மதிப்பு RM600 இலிருந்து RM1,200ஆக அதாவது இரு மடங்காக உயர்ந்துள்ளது, அதே சமயம் தனிநபர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக RM600 வழங்கப்படுகிறது என துணை நிதியமைச்சர் கூறினார்.

இன்றைய மக்களவையில்  ஜெலி  உறுப்பினர் ஜஹாரியின் கேள்விக்குப் பதிலளித்த அவர், 700,000 மக்களின் நலனுக்காக இந்த திட்டத்தை செயல்படுத்த 700 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

இலக்கு நிர்ணயிக்கப்பட்ட மானியத் திட்டத்தின் தொடர்ச்சியை உறுதி செய்வதற்காக கடந்த ஆண்டு 210,000 பெறுநர்களுக்கு RM130 மில்லியன் வழங்கப்பட்டதை ஒப்பிடும்போது தற்போது அத்தொகை ஐந்து மடங்கு அதிகமாக அதிகரித்துள்ளது என்று அவர் மேலும் விளக்கினார்.

இந்த உதவிக்கான விநியோகம் சபா, சரவாக் மற்றும் லாபுவான் ஆகிய இடங்களில் பிப்ரவரி 19 முதல் தொடங்கப்பட்ட நிலையில், தீபகற்பத்தில் உள்ளவர்களுக்கு ஜனவரி 22 முதல் கட்டங்கட்டமாக விநியோகிக்கப்படும்.

தீபகற்பத்தில் உள்ள பெறுநர்களுக்கு, உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படுகிறது, இது குடும்பங்கள் மற்றும் வாழ்க்கைத் துணை இல்லாத முதியவர்களுக்கு RM100, அதே சமயம் தனிநபர்களுக்கு மாதத்திற்கு RM50ஆகவும் வழங்கப்படுகிறது.

சபா, சரவாக் மற்றும் லாபுவானில் உள்ள பயனாளிகள் வருடத்திற்கு இரண்டு முறை இந்த உதவி பெறுகிறார்கள், அதாவது RM600 துணை இல்லாதவர்கள் வயதானவர்கள் மற்றும் தனி நபர்கள் RM300 பெறுகிறார்கள்.


Pengarang :