NATIONAL

சிகரெட் மற்றும் மது கடத்தல் கும்பல்கள் வெற்றிகரமாக முடக்கம் – ராயல் மலேசியன் சுங்கத் துறை

கோலாலம்பூர், ஏப் 24: சமீபத்தில் சிலாங்கூர் போர்ட் கிள்ளானில் சிகரெட் மற்றும் மது கடத்தல் கும்பல்களை ராயல் மலேசியன் சுங்கத் துறை (ஜேகேடிஎம்) வெற்றிகரமாக முடக்கியது.

மார்ச் 21 அன்று முதல் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் ரிங்கிட் 21,000 மதிப்புள்ள 4,030 லிட்டர் மதுபானம் கொண்டு செல்லப்பட்ட கன்டெய்னர் பிடிப்பட்டது என மத்திய மண்டல சுங்க உதவி இயக்குநர் ஜெனரல் நோர்லேலா இஸ்மாயில் கூறினார்.

இதற்கிடையில், கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி, கன்டெய்னர் ஒன்றை சோதனை செய்ததில், அண்டை நாடுகளிலிருந்து கடத்த முயன்ற ரிங்கிட் 864,000 மதிப்புடைய வெள்ளை சிகரெட்டுகள் பிடிப்பட்டன. அவை ரிங்கிட் 656,640 வரியை உள்ளடக்கியது.

கப்பல் பிரதிநிதிகளுடன் கண்டெய்னரை ஆய்வு செய்ததன் மூலம் கடத்தப்பட்டதாக நம்பப்படும் வெள்ளை சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டன. அவற்றை இறக்குமதி செய்வதற்கு உரிமம் மற்றும் வரி முத்திரை தேவை என்றும் நோர்லேலா கூறினார்.

மொத்த பறிமுதல் RM885,000 மதிப்புடையது மற்றும் RM708,250 வரியை உள்ளடக்கியது ஆகும்.

– பெர்னாமா


Pengarang :