ANTARABANGSA

இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பின் காஸாவில் மீண்டும் சேவையைத் தொடக்கியது தொண்டு அமைப்பு

மாஸ்கோ, ஏப்  29 – இம்மாதம் முதல் தேதி  இஸ்ரேலின் கொடூரத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஏழு தொண்டுழியர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் அதே வேளையில், காஸா பகுதியில் மீண்டும் தாங்கள்  செயல்படத் தொடங்குவதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்(டபள்யு.சி.கே.) தொண்டு நிறுவனம் நேற்று தெரிவித்தது.

எங்களிடம் 276 டிரக்குகள் உள்ளன. கிட்டத்தட்ட 80 லட்சம்  உணவுகள் அதில் உள்ளன. ரஃபா க்ரோசிங் வழியாக நுழைவதற்கு அவை தயாராக உள்ளன. நாங்கள் ஜோர்டானில் இருந்தும் டிரக்குகளையும் அனுப்புவோம் என்று அந்த அமைப்பின் தலைமை நிர்வாகி எரின் கோர் கூறினார்.

அந்த  உணவுத் தொண்டு நிறுவனம் இன்று வரை பாலஸ்தீனப் பகுதியில் 4.3 கோடிக்கும்  அதிகமான உணவுகளை விநியோகித்துள்ளது. காஸாவில் உள்ள அனைத்து சர்வதேச அரசு சாரா அமைப்புகளின் உதவிகளில் இது 62 விழுக்காடு என்று அவ்வமைப்பு குறிப்பிட்டது.

அந்த உதவிப் பொருள் வாகன அணியின் மீது  மீது இஸ்ரேல் நடத்திய  விமானத் தாக்குதல் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பிற பாரம்பரிய நட்பு நாடுகளின் கடும் கண்டனத்திற்கு உள்ளானது. ,இந்த தாக்குதல் திட்டமிடப்படாத ஒன்று என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு  கூறினார்.

இஸ்ரேலின் இந்த தாக்குதல் குறித்து பாரபட்சமற்ற சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று டபள்யு.சி.கே. வலியுறுத்தியுள்ளது.


Pengarang :