NATIONAL

கோலா குபு பாரு: கொள்கை அறிக்கையை ஒற்றுமை அரசாங்கம் இன்று முன்வைக்கும்

உலு சிலாங்கூர், மே 3: கோலா குபு பாரு மக்களுக்கு நான்கு முக்கிய அம்சங்களைக் கொண்ட கொள்கை அறிக்கையை ஒற்றுமை அரசாங்கம் இன்று முன்வைக்கவுள்ளது.

அவை பொருளாதார மேம்பாடு, சுற்றுச்சூழல், மக்களின் நல்வாழ்வு மற்றும் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் ஆகிய நான்கு முக்கிய அம்சங்களாகும் என வேட்பாளர் பாங் சோக் தாவ் தெரிவித்தார்.

“ஒற்றுமை அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையானது பொருளாதாரம், சுற்றுச்சூழல், மக்களின் நல்வாழ்வு மற்றும் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் ஆகிய நான்கு அடிப்படை அம்சங்களைக் கொண்டது.

“எல்லாவற்றையும் நான் நாளை விவரிப்பேன். இவை அனைத்தும் இடைத்தேர்தலை முன்னிட்டு கோலா குபு பாருவில் வசிப்பவர்களுக்கு நாங்கள் வழங்கும் திட்டங்கள் ஆகும்” என்று அவர் கூறினார்.

நேற்று, கம்போங் பாசிர், கெர்லிங்கில் உள்ள பக்காத்தான் ஹராப்பானின் முக்கிய செயல்பாட்டு அறையில் சந்தித்தப் போது அவர் இவ்வாறு கூறினார்.

இன்று இரவு 9 மணிக்கு பண்டார் உத்தாமா பத்தாங் காலியில் நடக்கும் ஒற்றுமை மெகா சிறப்புரை நிகழ்ச்சியில் தேர்தல் கொள்கை அறிக்கையை ஒற்றுமை அரசாங்கள் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்நிகழ்வில் மாநில ஹராப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, டிஏபி பொதுச்செயலாளர் அந்தோணி லோக் மற்றும் பாரிசான் நேசனல் (பிஎன்) பொதுச்செயலாளர் டத்தோஸ்ரீ டாக்டர் சாம்ரி அப்துல் காதிர் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Pengarang :