NATIONAL

“ஆசியான் கிளீன் டூரிசம் சிட்டி ஸ்டாண்டர்ட்“ விருதை ஷா ஆலம் மாநகராட்சி வென்றது

ஷா ஆலம், மே 3:  ஷா ஆலம் மாநகராட்சி  தேசிய அளவில் “ஆசியான் கிளீன் டூரிசம் சிட்டி ஸ்டாண்டர்ட்“ விருதை வென்ற ஒரே சிலாங்கூர்  பிபிடியாக   திகழ்கிறது.

சுற்றுச்சூழல் மேலாண்மை, கழிவு மேலாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தூய்மை பற்றிய விழிப்புணர்வு உள்ளிட்ட ஏழு முக்கிய அமசங்கள் அடிப்படையில் இந்த விருது வழங்கப்பட்டது என்று அதன் நிறுவன மற்றும் மக்கள் தொடர்பு இயக்குனர் கூறினார்.

பசுமை, சுகாதாரம், நகர்ப்புற பாதுகாப்பு மற்றும் சுற்றுலா உள்கட்டமைப்பு ஆகியவையும் மதிப்பீடு செய்யப்பட்டன என முகமட் அசார் முகமட் ஷெரீப்பின் கூறினார்.

“உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக ஷா ஆலம் நகரில் சுற்றுலாவின் தரம் மற்றும் வசதிகளைத் தொடர்ந்து மேம்படுத்த எம்பிஎஸ்ஏ உறுதிபூண்டுள்ளது. இதன் மூலம் நிலையான நகரத்தை உருவாக்க உதவ முடியும்,” என்று அவர் சமீபத்திய அறிக்கையில் கூறினார்.

விருது மதிப்பீடிற்காகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் அனைத்து தரவுகளும் குறிகாட்டிகளும் நடுவர் குழுவிற்கு வழங்கப்பட்டன.

கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி, சைபர்வியூ ரிசார்ட் மற்றும் ஸ்பாவில் நடந்த விழாவில், சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சகத்தின் (மோதேக்) பொதுச் செயலாளர் டத்தோ ரோஸ்லான் அப்துல் ரஹ்மான் வழங்கிய விருதை ஷா ஆலம் மேயர் செரெமி தர்மன் பெற்றார்.

ஆசியான் சுற்றுலாத் தகுதிகளைப் பெற்றுள்ள உள்ளூர் சுற்றுலாத் துறை தொழில்முனைவோரை அங்கீகரிப்பதற்காக இந்த விருதை மோதேக் ஏற்பாடு செய்துள்ளது.


Pengarang :