SELANGOR

2028 ஆம் ஆண்டிற்குள் 200,000 சிலாங்கூர் கூ வீடுகளை உருவாக்க மாநில அரசு எண்ணம்

உலு சிலாங்கூர், மே 3: எதிர்வரும் 2028 ஆம் ஆண்டிற்குள் 200,000 சிலாங்கூர் கூ வீடுகளை உருவாக்குவதை சிலாங்கூர் நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும், 2018ஆம் ஆண்டு முதல் 45,000 வீடுகளை கட்டுவதில் மாநில அரசு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கட்டுமான இலக்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

RM250,000 க்குக் குறைவான மதிப்பைக் கொண்ட 140,000க்கும் மேற்பட்ட மலிவு விலை வீடுகள் இதுவரை அவரது நிர்வாகத்தால் அங்கீகரிக்கப் பட்டுள்ளன, சில கட்டுமானப் பணியில் உள்ளன என்று அவர் விளக்கினார்.

“சிலாங்கூர் ரியல் எஸ்டேட் வீட்டு வசதி வாரியத்தால் அங்கீகரிக்கப் பட்ட 40,000 வீடுகளை ஒவ்வொரு ஆண்டும் கட்டுவதை மாநில அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம், மலிவு விலையில் வீடுகள் வழங்குவது மாநிலத்தின் இலக்கு” என்று அவர் கூறினார்.

“Rumah Selangorku Lagenda Ardea“ இன் அடிக்கல் நாட்டு விழாவிற்குப் பிறகு பல்வேறு நவீன வசதிகளுடன் நகரத்தை மறு வடிவமைப்பதிலும் மாநில அரசு கவனம் செலுத்துகிறது என தெரிவித்தார்.

பெட்டாலிங் மற்றும் உலு சிலாங்கூர் உள்ளிட்ட சில பகுதிகளை உதாரணமாக எடுத்துக் கொண்ட அமிருடின், 90களில் கட்டப்பட்ட பல வீட்டு தொகுதிகள் மறுவடிவமைப்பு செய்யப்பட வேண்டும் மற்றும் புது பொழிவை அளிக்க வேண்டும் என்றார்.

“கல்வி நிறுவனங்கள், கல்வி  வளர்ச்சி, பயிற்சி தொகுப்புகள் மற்றும் கார் உற்பத்தித் துறை,  போன்ற சிறந்த திட்டங்களை  அப்பகுதியை சுற்றியுள்ள பொருளாதார  கேந்திரங்கள்  மேம்படுத்த மாநில அரசு செயல்படுத்த உள்ளது ,” என  அவர் கூறினார்.


Pengarang :