ANTARABANGSA

பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்ட முதலாவது நபர் காலமானார்

நியு யார்க், மே 13- மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகம் இவ்வாண்டு
தொடக்கத்தில் பொருத்தப்பட்ட சிறுநீரக நோயாளி ஒருவர் காலமானதாகப்
போஸ்டனில் உள்ள மஸாசூசெட்ஸ் பொது மருத்துவமனை கூறியது.
ரிக் ஸ்லெய்மேன் என்ற அந்த நோயாளி உயிரிழந்தது குறித்து தாங்கள்
ஆழ்ந்த வருத்தமடைவதாக அந்த மருத்துவனையின் உறுப்பு மாற்றும்
அறுவை சிகிச்சைக் குழு தெரிவித்தது.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கும்
அவரின் மரணத்திற்கும் தொடர்பிருப்பதாகத் தெரியவில்லை என்ற
அம்மருத்துவனை குறிப்பிட்டது.

இறுதிக் கட்ட சிறுநீரக பாதிப்பை எதிர்நோக்கியிருந்த 62 வயதான
ஸ்லெமேனுக்கு கடந்த மார்ச் மாதம் மேற்கொள்ளப்பட்ட நான்கு மணி
நேர அறுவை சிகிச்சையின் மூலம் மரபணு மாற்றப்பட்ட பன்றியின்
சிறுநீரகம் பொருத்தப்பட்டது.

நோயாளிகளுக்குத் தயாராக கிடைக்கக் கூடிய உடல் உறுப்புகளை வழங்கும்
முயற்சியில் இது ஒரு மைல்கல் என அம்மருத்துவமனை அப்போது
கூறியிருந்தது.

ஏழு ஆண்டுகளாக டயாலிசிஸ் எனப்படும் இரத்த சுத்திகரிப்பு சிகிச்சைப்
பெற்று வந்த ஸ்லெய்மேனுக்கு கடந்த 2018ஆம் ஆண்டில் அதே
மருத்துவமனையில் மாற்று மனித சிறுநீரகம் பொருத்தப்பட்டது. எனினும்
அந்த சிறுநீரகம் ஐந்தாண்டுகளுக்குப் பின்னர் பழுதடைந்ததைத் தொடர்ந்து
அவர் மறுபடியும் டயாசிஸிஸ் சிகிச்சையைப் பெற வேண்டி வந்தது.


Pengarang :