NATIONAL

கர்ப்பிணி காதலியைக் கொன்றவனை மனநல மருத்துவரிடம்  அனுப்ப அனுமதி

கிள்ளான், மே 15 – கடந்த ஆண்டு தனது கர்ப்பிணி காதலியைக் கொன்ற வழக்கில் மனநல மருத்துவரிடம் பரிசோதனைக்கு அனுப்புவதற்கான குற்றம் சாட்டப்பட்டவரின் விண்ணப்பத்திற்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

முஹம்மது ஃபக்ருல் அய்மான் சஜாலியின் (21) விண்ணப்பத்தை துணைப் பதிவாளர் முகமட் ஹிர்மான் அப்துட் ரவுப், வழக்கறிஞர் முஹம்மது நோர் டாம்ரின் மூலம் அனுமதித்தார், இதற்கு துணை அரசு வழக்கறிஞர் ரோஸ்னி முகமது ரட்சுவான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

கடந்த ஆண்டு செப்டம்பரில் சுங்கை புசார் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இதேபோன்ற விண்ணப்பத்தை பிரதிவாதி சமர்ப்பித்தார், ஆனால், அது நிராகரிக்கப்பட்டது

“இந்த விவகாரம் உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்றும் விசாரித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் மாஜிஸ்திரேட் கருதினார்.

“எனது தரப்பினர் மேலும் கண்காணிப்பதற்காக மனநல மருத்துவரிடம் அனுப்புவதற்கான கோரிக்கை குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 342 இன் கீழ் செய்யப்படுகிறது,” என்று வழக்கறிஞர் கூறினார்.

மனநல அறிக்கைகள் மற்றும் பிற ஆவணங்களை சமர்ப்பிப்பதற்காக ஜூலை 23ஐ ஹிர்மன் நிர்ணயித்தார்.

மார்ச் 21 அன்று, சுங்கை புசார் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த வழக்கை கிள்ளான் உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற உத்தரவிட்டது.

கடந்த ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி, மே 22 அன்று இரவு 8.30 மணி முதல் மே 23, 2023 அன்று காலை 8 மணிக்குள் ஜாலான் சுங்கை லிமாவ்வில் நூர் அனிசா அப்துல் வஹாப் (21), என்பவரைக் கொலை செய்ததாக ஃபக்ருல் மீது குற்றம் சாட்டப்பட்டது.

குற்றவியல் சட்டத்தின் 302 வது பிரிவின் கீழ் இக்குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனையை விதிக்கப்படும்.

– பெர்னாமா


Pengarang :