NATIONAL

19வது தொற்றுநோயியல் வாரத்தில் 2,338 டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் பதிவு

புத்ராஜெயா, மே 20: கடந்த மே 5 முதல் 11 வரையிலான 19வது தொற்றுநோயியல்
வாரத்தில் மொத்தம் 343 புதிய டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது
முந்தைய வாரத்தில் பதிவான 1,995 சம்பவங்களுடன் ஒப்பிடும்போது 2,338 ஆக
அதிகரித்துள்ளது.

இந்த காலகட்டத்தில் டிங்கி காய்ச்சலால் ஒரு மரணம் பதிவாகியுள்ளதாகச் சுகாதார
இயக்குநர் ஜெனரல் டத்தோ டாக்டர் முஹம்மது ராட்ஸி அபு ஹாசன் தெரிவித்தார்.

"19வது தொற்றுநோயியல் வாரத்தில் 60 ஹாட்ஸ்பாட் இடங்கள் பதிவாகியுள்ளன.

" அதில் சிலாங்கூரில் 45 இடங்கள், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவில் 7 இடங்கள்,
சரவாக்கில் 3 இடங்கள், பினாங்கில் 2 இடங்கள் மற்றும் கெடா, பேராக் மற்றும் நெகிரி
செம்பிலானில் தலா ஒரு இடங்கலாகப் பதிவாகியுள்ளன" என்று அவர் கூறினார்.

தென்மேற்குப் பருவக்காலத்தால் மழைப்பொழிவு குறைந்து, வானிலை வெப்பமடையும்
என எதிர்பார்க்கப்படுவதால் சுற்றுச்சூழலில் ஏடிஸ் கொசுக்களின் எண்ணிக்கை
அதிகரிக்கும் வாய்ப்புண்டு என்று அவர் கூறினார். .

எனவே, வாரம் ஒருமுறையாவது ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களைக்
கண்டுபிடித்து அழிக்கும் பணியை மேற்கொண்டு, வீட்டிற்கு உள்ளேயும், வெளியேயும்
ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்கள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய
பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

– பெர்னாமா


Pengarang :