SELANGOR

இலவசச் சுகாதாரப் பரிசோதனை

ஷா ஆலம், மே 20: எதிர்வரும் சனிக்கிழமை அன்று லெம்பா ஜெயா தொகுதியில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை இலவசச் சுகாதார பரிசோதனை, சிலாங்கூர் சாரிங் திட்டத்தில் பங்கேற்க பொதுமக்கள் அழைக்கப்படுகிறார்கள்.

உடல், இரத்தம், சிறுநீர், புற்றுநோய், கண் மற்றும் பல் பரிசோதனைகளை வழங்கும் இந்நிகழ்ச்சி எம்பிஏஜே மண்டபம் தாசிக் தம்பஹான், கம்போங் தாசிக் தம்பஹானில் நடைபெறும் என சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.

“செலாங்கா செயலியில் பதிவு செய்ய பொதுமக்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். செலாங்காவில் உள்ள படிவத்தின் மூலம் ஆபத்து காரணிகளின் மதிப்பீட்டின் அடிப்படையில் பரிசோதனை வழங்கப்படுகிறது,” என்று அவர் முகநூலில் தெரிவித்தார்.

செலாங்கா பதிவு செய்யும் வழிமுறைகள் இங்கே:

-செலங்கா செயலி பதிவிறக்கம்

-சிலாங்கூர் சாரிங் பொத்தானை அழுத்தவும்

-படிவத்தை நிரப்பவும்

– மேலே உள்ள இடம் மற்றும் தேதியைத் தேர்ந்தெடுக்கவும்

சிலாங்கூர் சாரிங் திட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம் குடியிருப்பாளர்கள் நோய்களை முன்கூட்டியே கண்டறிய உதவுகிறது.

சிலாங்கூர் பட்ஜெட் 2024இல், டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இலவச மருத்துவ பரிசோதனையை திட்டத்தைத் தொடர RM3.2 மில்லியன் ஒதுக்குவதாக அறிவித்தார்.


Pengarang :