ANTARABANGSA

தற்காலிகப் படகுத் துறை வழியாக 569 டன் உதவிப் பொருள்கள் காஸாவில் விநியோகம்

வாஷிங்டன், மே 21- கடந்த வாரம் செயல்படத் தொடங்கிய தற்காலிகப்
படகுத் துறை வழியாக 569 மெட்ரிக் டன் உதவிப் பொருள்கள் காஸாவுக்கு
அனுப்பப்பட்டதாக அமெரிக்க தளபத்திய மையத்தை (சென்ட்கோம்)
மேற்கோள் காட்டி அனாடோலு ஏஜென்சி செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு சிற்றரசு, ஐரோப்பிய ஒன்றியம்
மற்றும் மேலும் பல நட்பு நாடுகள் இந்த மனிதாபிமான உதவிப்
பொருள்களை வழங்கியதாகச் சென்ட்கோம் தனது எக்ஸ் பதிவில் கூறியது.

பாலஸ்தீன மக்களுக்கு அத்தியாவசியமாக த் தேவைப்படும்
வழங்குவதற்கு ஏதுவாக காஸாவுக்கு உதவிப் பொருள் விநியோகத்தை
அதிகரிப்பதற்கான தற்காலிகத் தீர்வாக இந்த படகுத் துறை விளங்குகிறது
என்று அது குறிப்பிட்டது.

கடந்த மே 17ஆம் தேதி காஸா தீபகற்பத்தில் உள்ள அந்த படகுத் துறை
வழியாக உதவிப் பொருள்களை ஏற்றிய டிரக்குகள் தரைப் பகுதி நோக்கி
பயணித்தன.


Pengarang :