NATIONAL

லபோஹான் டாகாங் நீர் சுத்திகரிப்பு மையம் மீண்டும் செயல்படத் தொடங்கியது

கோலாலம்பூர், மே 24- மின்விநியோகத் தடை காரணமாக பணி நிறுத்தம் செய்யப்பட்ட லபோஹான் டாகாங் நீர் சுத்திகரிப்பு நிலையம் இன்று அதிகாலை முழுமையாகச் செயல்படத் தொடங்கியது.

இன்று அதிகாலை 5.00 மணி தொடங்கி பயனீட்டாளர்களுக்கு நீர் விநியோகம் கட்டங்  கட்டமாக வழங்கப்படுவதாக பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் சென். பெர்ஹாட் நிறுவனம் கூறியது.

பயனீட்டாளர்களின் இருப்பிடம் மற்றும் நீர் விநியோக முறையின் நீர் அழுத்தம் ஆகியவற்றின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நீர் விநியோக நேரம் மாறுபடும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் நீர் விநியோகம் சீராக இருப்பதை உறுதி  செய்வதற்கு ஆயர் சிலாங்கூர் நிறுவனம் டேங்கர் லோரிகள் மூலம் நீர் விநியோகத்தில் ஈடுபட்டு வருகிறது என்று அந்நிறுவனம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

இந்த நீர் விநியோகத் தடை தொடர்பான சமீபத்திய நிலவரங்களை ஆயர் சிலாங்கூர் நிறுவனம் ஊடகங்கள் வாயிலாக தொடர்ந்து வெளியிட்டு வரும் எனவும் அது குறிப்பிட்டது.

மின் விநியோகத் தடை காரணமாக நேற்று லபோஹான் டாகாங் நீர் சுத்திகரிப்பு மையத்தில் பணிகள் தடைபட்டன. ஓலாக் லெம்பிட் பிரதான துணை மின் நிலையத்தில் அவசரகால சாதனங்களை பழுதுபார்க்கும் பணியை தெனாகா நேஷனல் நிறுவனம் மேற்கொண்ட காரணத்தால் இந்த மின் தடை ஏற்பட்டது

இதன் காரணமாக உலு லங்காட் மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்றிரவு 10.00 மணி தொடங்கி அட்டவணையிடப்படாத நீர் விநியோகத் தடை ஏற்பட்டது,


Pengarang :