SELANGOR

ஷா ஆலமில் உடைந்த குழாய் சரி செய்யப்பட்டது- பாதிக்கப்பட்ட பகுதிகளில் நீர் விநியோகம் தொடங்கியது

ஷா ஆலம், மே 27- இங்குள்ள செக்சன் 22, ஜாலான் புடிமானில் உடைந்த  குழாயை அவசர கால அடிப்படையில் பழுது பார்க்கும் பணியை பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் சென். பெர்ஹாட் நிறுவனம் மேற்கொண்டது. இந்த குழாய் உடைப்பால் அருகிலுள்ள 28 இடங்களில் நேற்று முதல் நீர் விநியோகத் தடை ஏற்பட்டது.

நீர் விநியோகத் தடை ஏற்பட்ட ஷா ஆலம், கிள்ளான், பெட்டாலிங் ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் கட்டங் கட்டமாக வழக்க நிலைக்கு திரும்பிக் கொண்டிருப்பதாக அந்த மாநில நீர் விநியோக நிறுவனம் கூறியது.

ஜாலான் புடிமானில் ஏற்பட்ட குழாய் உடைப்பைச் அவசர கால அடிப்படையில் சரி செய்யும் பணி இன்று அதிகாலை 5.30 மணிக்கு முற்றுப் பெற்றது. என்பதை ஆயர் சிலாங்கூர் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறது.

நீர் விநியோகம் நாளை செவ்வாய்க்கிழமை அதிகாலை 6.00 மணியளவில் முழுமையாக சீரடையும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று சமூக ஊடகங்களில் வெளியிட்ட ஒரு பதிவில் அந்நிறுவனம் குறிப்பிட்டது.

நீர் விநியோகம் வழக்க நிலைக்குத் திரும்பும் நேரம் பயனீட்டாளர்களின் இருப்பிடம் மற்றும்  பகிர்வு முறையில் காணப்படும் நீர் அழுத்தம் ஆகியவற்றைப் பொறுத்து அமையும் என அந்நிறுவனம்  தெளிவுபடுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பான சமீபத்திய நிலவரங்கள் அனைத்து சமூக ஊடகங்கள் வாயிலாகவும் தொடர்ந்தாற்போல் வெளியிடப்படும் என்றும் அது கூறியது.

ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சமூகத் தளங்களான பேஸ்புக், இண்ட்ஸ்டா கிராம் மற்றும் எக்ஸ் ஆகியவற்றின் வாயிலாக அல்லது 15300 என்ற எண்களில் அல்லது  என்ற அகப்பக்கம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

ஜாலான் புடிமானில் நேற்று ஏற்பட்ட குழாய் உடைப்பைத் தொடர்ந்து 28 பகுதிகளில் நேற்று மாலை 6.00 மணி தொடங்கி நீர் விநியோகத் தடை ஏற்பட்டதாக ஆயர் சிலாங்கூர் முன்னதாக கூறியிருந்தது.


Pengarang :