NATIONAL

இணைய சூதாட்டம், காதல் மோசடி தொடர்பாக பெண் உள்பட 12 பேர் கைது

கோலாலம்பூர், மே 27 – அமெரிக்காவில் உள்ளவர்களைக் இலக்காகக் கொண்டு  இணைய  சூதாட்டம் மற்றும் காதல் மோசடிகளை நடத்தி வந்த கும்பலுடன்  தொடர்புடையவர்கள் என  சந்தேகிக்கப்படும் ஒரு பெண் உட்பட 12 பேர் கைது காவல் துறையால்  செய்யப்பட்டுள்ளனர்.

பதினெட்டு முதல் 43 வயது வரையிலான அந்த  சந்தேக நபர்கள்  கடந்த மே 16ஆம் தேதி நகரில் உள்ள குடியிருப்பில்  கைது செய்யப்பட்டுள்ளதாக  புக்கிட் அமான் வணிக குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோஸ்ரீ ராம்லி முகமது யூசுப் கூறினார்.

அ கும்பலிடமிருந்து ஒன்பது மடிக்கணினிகள், 33 கைத்தொலைபேசிகள், ஒரு தங்க நெக்லஸ், ஐந்து மோதிரங்கள், இரண்டு செட் ஆடம்பரக் கைக்கடிகாரங்கள், பல்வேறு மதிப்புள்ள வெளிநாட்டு நாணயங்கள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர் என அவர் சொன்னார்.

இந்த கும்பல் கடந்த ஏப்ரல் மாதம்  முதல் செயல்பட்டு வந்துள்ளது. கைது செய்யப்பட்ட அனைவரும் கோல் சென்டரின் முகவர்களாக செயல்பட்டு வந்துள்ளதோடு  மாதம் 2,500 வெள்ளி சம்பளம் மற்றும்   பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து மோசடி வழி கிடைக்கும் தொகையில்  நான்கு சதவீத கமிஷனும் கூடுதலாக வழங்கப் பட்டது என்று அவர் இன்று மெனாரா கே.பி.ஜே.வில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

அமெரிக்காவில் உள்ளவர்களை ஏமாற்றுவதற்கு முன் அவர்களைப் பற்றி அறிந்து கொள்வதற்காக  முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் வழியாக போலி சமூக ஊடக கணக்குகளை அக்கும்பல் உருவாக்கும் என்று ராம்லி கூறினார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு இணைய சூதாட்டத் தளங்களுக்கான இணைப்புகள் வழங்கப்படும், இதன் மூலம்  அவர்கள் பந்தயம் கட்டிய அனைத்து பணத்தையும் இழக்க நேரிடும். இந்த
மோசடி தொடர்பில்  குற்றவியல் சட்டத்தின் 420 வது பிரிவின் கீழ்  விசாரிக்கப்படுகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.


Pengarang :