SELANGOR

கிள்ளான், பெட்டாலிங், ஷா ஆலமில் நீர் விநியோகம் முழுமையாக வழக்க நிலைக்குத் திரும்பியது

ஷா  ஆலம், மே 28- இங்குள்ள செக்சன் 22, ஜாலான் புடிமானில் உடைந்த குழாயை சரி செய்யும் பணிகள் காரணமாக தடைபட்ட நீர் விநியோகம் இன்று அதிகாலை 6.00 மணியளவில் முழுமையாக வழக்க நிலைக்குத் திரும்பியது.

அட்டவணையிடப்படாத இந்த நீர் விநியோகத் தடை காலத்தில் முழு ஒத்துழைப்பை வழங்கிய அனைத்து பயனீட்டாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் நிறுவனம் கூறியது.

இந்த அட்டவணையிடப்படாத நீர் விநியோகத் தடை காலத்தில் பொறுமை காத்ததோடு முழு ஒத்துழைப்பையும் வழங்கிய அனைத்து பயனீட்டாளர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம் என்று அந்நிறுவனம் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

உடைந்து குழாயை சரி செய்யும் பணிகள் காரணமாக கிள்ளான், ஷா ஆலம் மற்றும் பெட்டாலிங் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில்  கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணி முதல் நீர் விநியோகத் தடை ஏற்படும் என்று அந்நிறுவனம் முன்னதாக அறிவித்திருந்தது.

நீர் விநியோகம் தொடர்பான சமீபத்திய நிலவரங்களுக்கு ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் சமூக ஊடகங்களான பேஸ்புக், இண்ஸ்டாகிராம், எக்ஸ் தளங்கள் வாயிலாவும் 15300 என்ற எண்களிலும் அல்லது https://www.airselangor.com/  என்ற அகப்பக்கம் வாயிலாகவும் அறிந்து கொள்ளலாம் என அந்நிறுவனம் கூறியிருந்தது


Pengarang :