SELANGOR

டி.ஆர் கும்பல் உறுப்பினர்கள் மீது இன்று கிள்ளான் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

கிள்ளான், மே 29 – கடந்த ஐந்தாண்டுகளாக திட்டமிட்ட  டி.ஆர். குற்றச் செயல்  கும்பலில் பங்கேற்றதற்காக 20 பேர் மீது செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் என்.நித்தியன், (வயது 39), எஸ்.லோகன் (வயது 32) ஆர்.பார்த்திபன் (வயது 32) எம்.கேசவ நாயர் (வயது 30), ஏ.பாலமுருகன் (வயது 40), வி.எஸ்.வில்பர்ட் (வயது 46),  எம்.ராமகிருஷ்ணன் (வயது 45),  ஆர்.இ.மோகன் (வயது 34),  எம்.தனசேகரன் (வயது  44),  எட்வர்ட் லிய (வயது 49),  எஸ்.மனோராஜ் (வயது 28), மு. அமரன் (வயது 30),  எஸ்.ஹேமநாதன் (வயது 31), கே.தன சீலன் (வயது 38). கே.ரவிசங்கரா (வயது 43),  முகமது ராசி அப்துல்லா (வயது 51), ஜி.தீனேஷ்குமார் (வயது 29),  கே.வேநாயகராஜ், வயது 32,  ஏ.கோகிலன் (வயது 26) மற்றும் எம்.தினேஷ்குமார் (வயது  26) ஆகியோரும் அடங்குவர்.

நீதிபதி அகமது ஃபைசாட் யஹாயாவின் முன்னிலையில் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு தனித்தனியாக  வாசிக்கப்பட்ட போது அதனை புரிந்து கொண்டதற்கு அடையாளமாக அவர்கள் அனைவரும் தலையசைத்தனர்.

எனினும, 2021 ஆம் ஆண்டு பாதுகாப்பு குற்றச் சட்டம்  (சிறப்பு நடவடிக்கைகள்) (சொஸ்மா) உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பின் கீழ் வருவதால் அவர்களிடம் வாக்குமூலம்  பதிவு செய்யப்படவில்லை.

கடந்த  2019ஆம் ஆண்டு நவம்பர்  முதல் இந்த ஆண்டு மே 2 ஆம் தேதி வரை கோல சிலாங்கூர்,  சுங்கை ஜாங்குட்டில் உள்ள கடல்  உணவகத்தில் இக்குற்றங்களைப் புரிந்ததாக அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.

குற்றவியல் சட்டத்தின் (சட்டம் 574) பிரிவு 130V(1) இன் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஐந்து முதல் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க இச்சட்டப் பிரிவு வகை செய்கிறது.

அரசுத் தரப்பில் துணை அரசு வழக்கறிஞர்கள் ஷபிக் ஹாஷிம், லினா ஹனினி இஸ்மாயில், சியாஃபினாஸ் ஷாபுதீன் ஆகியோர் வழக்கை நடத்துகின்றனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் 14 பேர் சார்பில் வழக்கறிஞர்கள் ஐயாசாமி வேலு, நைசத்துல் ஜம்ரினா கரிஜாமான், ரெவின் குமார் மற்றும் எஸ். வினேஷ் ஆகியோர் ஆஜராகினர். எஞ்சிய அறுவரை வழக்கறிஞர்கள் யாரும் பிரதிநிதிக்க வில்லை.


Pengarang :