SELANGOR

இளையோரின் திறனை வெளிப்படுத்த இளம் சட்டமன்ற உறுப்பினர் நிகழ்வு அடுத்தாண்டும் நடத்தப்படும்

ஷா ஆலம், மே 29- இங்கு நடைபெற்ற 2024 சிலாங்கூர் இளம் சட்டமன்ற உறுப்பினர் (ஏடிஎன்) நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் வெளிப்படுத்திய திறனை மாநில சட்டமன்ற சபாநாயகர் பெரிதும் பாராட்டினார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் வாதங்களை தரமான முறையில் முன்வைத்ததுடன் நடப்பு நிலவரங்கள் மற்றும் மாநில அரசின் கொள்கைகைள் குறித்து பரந்த அறிவாற்றலையும் கொண்டுள்ளனர் என்று லாவ் வேங் சான் கூறினார்.

பொதுவில் அவர்களின் வாதத்திறமை மேம்பட்ட நிலையில் இருந்ததோடு தாங்கள் பிரதிநிதிக்கும் பகுதியின் விவகாரங்களை மிகச் சிறப்பான முறையிலும் முன்வைத்தனர். அதோடு மட்டுமின்றி மாநில அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்களையும் அவர்கள் நன்கு அறிந்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

அடுத்த தலைமுறைத் தலைவர்களின் ஆற்றலை வெளிக்கொணர்வதற்கு ஏதுவாக இந்த திட்டத்தை அடுத்தாண்டும் தொடர்ந்து நடத்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம் என்று இங்குள் விஸ்மா டி.என்.எஸ்.சில் நடைபெற்ற இளம் சட்டமன்ற உறுப்பினர் தொர்பான செய்தியாளர் கூட்டத்தின் போது அவர் சொன்னார்.

 இந்த இளம் சட்டமன்ற உறுப்பினர் திட்டத்தை இடைநிலைப் பள்ளி நிலையிலும் விரிவுபடுத்த தாங்கள் திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஜூனியர் சட்டமன்ற உறுப்பினர் திட்டத்தை நடத்துவதற்கு மாநில கல்வி இலாகாவுடன் நாம் ஒத்துழைப்பு நல்குவதற்கான வாய்ப்பும் உள்ளது என அவர் குறிப்பிட்டார்.

இந்த சிலாங்கூர் இளம் சட்டமன்ற உறுப்பினர் நிகழ்வு நேற்று முன்தினம் தொடங்கி இரு தினங்களுக்கு நடைபெற்றது. இந்த நிகழ்வை நடத்துவதில் சமூக ஜனநாயகச் சங்கம் மற்றும் சிலாங்கூர் இளம் நாடாளுமன்ற உறுப்பினர் அமைப்பு ஆகியவை ஒத்துழைப்பு நல்கின.


Pengarang :