ANTARABANGSA

சீன துணையதிபருடன் ஜாஹிட் சந்திப்பு- அரச தந்திர உறவுகளுக்கு நன்றி தெரிவித்தார்.

பெய்ஜிங், மே 31- துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமது ஜாஹிட் ஹமிடி சீன துணையதிபர் டிங் ஷியோஜியாங்குடன் இன்று காலை சந்திப்பு நடத்தினார். இந்த சந்திப்பு வில்லா 5, டியோயுதாய் அரசாங்க விருந்தினர் மாளிகையில் நடைபெற்றது.

ஷியா ஜியோங்கின் அழைப்பின் பேரில் இம்மாதம் 22 ஆம் தேதி தொடங்கி நாளை வரை ஜாஹிட் சீனாவுக்கு  மேற்கொண்டுள்ள அதிகாரப்பூர்வ பயணத்தின் ஒரு பகுதியாக இந்த சந்திப்பு அமைந்துள்ளது.

காலை 10.00 அணிக்கு அரசாங்க விருந்தினர் மாளிகைக்கு வந்த ஜாஹிட் சுமார் ஒரு மணி நேரம் சீன துணையதிபருடன் சந்திப்பு நடத்தினார்.

இவ்விரு தலைவர்களும் ஆற்றிய வரவேற்புரையில் கடந்த 1974ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் தேதி தொடங்கிய மலேசியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான அரச தந்திர உறவுக்கு தங்களின் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

இந்த சந்திப்பு நிகழ்வுக்குப் பின்னர் வெளிநாட்டு நட்புறவுக்கான சீன மக்கள் சங்கம் மற்றும் பெய்ஜிங்கில் உள்ள மலேசிய தூதரகம் இணைந்து நடத்தும் சீன-மலேசிய அரச தந்திர உறவுகளின் ஐம்பதாம் ஆண்டு நிறைவு விழாவில் ஜாஹிட் கலந்து கொள்கிறார்.

தேசிய தொழில்நுட்ப மற்றும் தொழில்திறன் பயிற்சி (திவேட்) செயல்குழுவின் தலைவருமான ஜாஹிட் துணை வெளியுறவு அமைச்சர் டத்தோ முகமது அலாமின் மற்றும் சீனாவுக்கான மலேசியத் தூதர் டத்தோ நோர்மான் முகமதுவுடன் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

அரசாங்க கவுன்சிலரும் பொது பாதுகாப்பு அமைச்சருமான வாங் ஜியாஹோங்குடன் ஜாஹிட் இன்று பிற்பகல்  மரியாதை நிமித்தச் சந்திப்பை மேற்கொள்ளவுள்ளார்.

இன்று மாலை நடைபெறும் சீன-மலேசிய அரச தந்திர உறவுகளின் ஐம்பதாம் ஆண்டு நிறைவு விழா விருந்திலும் ஜாஹிட் கலந்து கொள்ள விருக்கிறார்.


Pengarang :