NATIONAL

திருமண அழைப்பிதழ் மூலம் தரவுகளை திருடும் மோசடிக் கும்பல் – காவல்துறை எச்சரிக்கை

கோலாலம்பூர், ஜூன் 4- பொது மக்களிடமிருந்து தகவல்கள் மற்றும் நிதி தொடர்பான விபரங்களைத் திருடுவதற்கு மால்வேர் எனப்படும் தீங்கிழைக்கும் மென்பொருள் பதிக்கப்பட்ட திருமண அழைப்பிதழ்களை சமூக ஊடகங்கள் வாயிலாக அனுப்பும் மோசடிக் கும்பல்களின் நடவடிக்கை குறித்து காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த பாணியிலான மோசடி நடவடிக்கை கடந்த 2023ஆம் ஆண்டு மத்தியில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறிய புக்கிட் அமான் வர்த்தக குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோஸ்ரீ ரம்லி முகமது யூசுப், விவேக கைப்பேசிகளை ஊடுருவதற்கு இந்த தந்திரத்தை மோசடிக் கும்ல்கள் பயன்படுத்துவத்துவதாகத் தெரிவித்தார்.

இத்தகைய செயலிகளை நாம் பதிவிறக்கம் செய்து கைப்பேசியில் நிறுவும் பட்சத்தில் நம்மை அறியாமலே நமது கைப்பேசியை தரவுகளை முழுமையாக ஆக்கிரமிக்கும் வாய்ப்பினை குற்றவாளிகள் பெறுகின்றனர் என்று அவர் சொன்னார்.

நமது கைபேசியில் ஊடுருவுவது மூலம் அதில் உள்ள தரவுகளை மோசடிக் கும்பல் திருடுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டு அதன் வாயிலாக நாம் பண இழப்புகளை எதிர்நோக்கும் அபாயம் உண்டாகிறது என்று அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.

ஆகவே, பொது மக்கள் எப்போதும் விழிப்புடன் இருக்கும் அதேவேளையில் செய்திகள், மின்னஞ்சல்கள் மற்றும் தளங்கள் வழி அனுப்பப்படும் செயலி கோப்புகளை (ஏபிகே) பதவிறக்கம் செய்வதில் கவனமாக இருக்க வேண்டும் அவர் அறிவுறுத்தினார்.


Pengarang :