NATIONAL

அலாஸ்காவில் உயிரிழந்த மலையேறி ஜூல்கிப்ளியின் சவப் பரிசோதனை நிறைவடைந்தது

கோலாலம்பூர், ஜூன் 6 : அமெரிக்காவில் உயிரிழந்த மலையேறும் வீரர் ஜூல்கிப்ளி யூசோப்பின் பிரேதப் பரிசோதனை திங்கள்கிழமை நிறைவடைந்தது. மலேசியாவுக்குக் கொண்டு வருவதற்காக  அவரது உடல் தற்போது அலாஸ்காவில் உள்ள மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளதாகக்  கிளப் அல்பைன் மலேசியா தெரிவித்துள்ளது.

காப்புறுதி நிறுவனம், இறுதிச் சடங்கு நிர்வாக முகவர், லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள துணைத் தூதரகம் மற்றும் கிளப்பின் பிரதிநிதிகள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் உடலை மலேசியாவுக்குத்  திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகள்  செய்யப்பட்டு வருவதாகத் தனது முகநூல் பதிவில்  அந்த கிளப் கூறியது.

இறந்தவரின் உடலைத் திரும்பக் கொண்டு வருவதற்கான விமானப் பயணம் பற்றிய விவரங்கள் எங்களுக்குக் கிடைக்கவில்லை.

ஜூல்கிப்ளியின் உடல் மீண்டும் கொண்டு வரப்படுவதற்கு முன் அலாஸ்காவில் உள்ள ஏங்கரேஜ்  இஸ்லாமிய சமூக மையத்தில்  உடல் ஸ்நானம் செய்யப்படும் என்று அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

மற்றொரு மலையேறியான  முகமது இல்லஹாம் இஷாக் உறைபனியினால் பாதிக்கப்பட்டு ஆங்கரேஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வேளையில் அவரின் சகாவான  ஜைனுடின் லாட் சிகிச்சை முடிந்து  ஜூல்கிப்ளியின் உடலை கொண்டு வரும் பணியில்ஸ உதவி வருவதாக அந்த  கிளப் தெரிவித்தது.

வட அமெரிக்காவின் மிக உயரமான டெனாலி சிகரத்தை ஏறும் போது   6,000 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் சிக்கிக் கொண்ட மூன்று மலேசிய மலை ஏறுபவர்களில் ஒருவர் இறந்துவிட்டதாக இமாமாதம் 1ஆம் தேதி அத்த  கிளப் கூறியிருந்து.


Pengarang :