NATIONAL

காரை தனியாக ஓட்டிய 11 வயது ஆட்டிஸம் சிறுவன்-தந்தை மீது காவல் துறை நடவடிக்கை

சிபு, ஜூன் 6- காரை  நகரில் தனியாக ஓட்டிய 11 வயது சிறுவனின் தந்தை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட சிறுவன் நேற்று மாலை சுமார் 6.50 மணியளவில் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டத்தின்  26(1)வது பிரிவின் கீழ்  நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று சிபு மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி ஜூல்கிப்ளி சுஹைலி கூறினார்.

அந்தச் சிறுவன் மற்றும் அவனது பெற்றோர் விசாரணைக்காகச் சிபு போக்குவரத்து காவல் துறையின் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

காரை ஓட்டிச் சென்ற சிறுவனுக்கு மன இறுக்கம் இருப்பதும் சிபு மருத்துவமனையின் மனநல சிறப்பு பிரிவில் அவன் மருத்துவப் பதிவைக் கொண்டிருப்பதும்  விசாரணையின் முடிவில் கண்டறியப்பட்டது என அவர் சொன்னார்.

நேற்று பிற்பகல் 3.00 மணியளவில் சமூக ஊடகங்களில் வைரலான 30 வினாடி  காணொளி  தொடர்பான தகவல் காவல்துறைக்குக் கிடைத்தது என அவர் குறிப்பிட்டார்.

இங்குள்ள ஜாலான் கம்போங் நியாபோரில் அச்சிறுவன் தனியாகக் காரை ஓட்டும் காட்சி அதில் பதிவாகியிருந்தது.


Pengarang :