NATIONAL

அடுத்தாண்டு ஆசியான் தலைவர் பதவியை ஏற்கும் மலேசியாவுக்கு ஆசியான் செயலகம் முழு ஆதரவு

கோலாலம்பூர், ஜூன் 7 – ஆசியான் தலைவராக அடுத்தாண்டு பொறுப்பேற்கவிருக்கும் மலேசியாவுக்கு தனது முழு ஆதரவையும் வழங்க ஆசியான் செயலகம் தயாராக உள்ளது.

கம்போடியாவில் உள்ள சீம் ரீப்பில்  மலேசியாவின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் சாங் லீ காங்குடன் நடத்திய சந்திப்பின் போது  அந்த செயலகத்தின்  பொதுச் செயலாளர் காவ் கிம் ஹார்ன் இந்த ஆதரவை உறுதிப்படுத்தினார்.

ஆசியானில் தொடக்கச் சூழல் அமைப்பை மேம்படுத்துவதில் உறுதியான கடப்பாட்டைக் கொண்டிருப்பதற்காக  மலேசியாவை ஆசியான் பொதுச்செயலாளர் பெரிதும் பாராட்டினார் என்று ஆசியான்  எக்ஸ் தளத்தில் அவர் கூறினார்.

சைம் ரீப்பில் நடைபெற்று வரும்  அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகள் (AMMSTI-20) தொடர்பான 20வது ஆசியான் அமைச்சர்கள் கூட்டத்தின் இடைவேளையின் போது காவ் மற்றும் சாங் இடையிலான இந்த சந்திப்பு நடந்தது.

மலேசியா அடுத்த ஆண்டு லாவோஸிடம் இருந்து ஆசியான் தலைவர் பதவியை ஏற்கவிருக்கிறது.


Pengarang :