SELANGOR

ரும்புன் சிலாங்கூர் இயக்கம் ஜூன் 19 முதல் 21 வரை பெட்டாலிங் மாவட்டத்தில் நடைபெறும்

சபாக் பெர்ணம், ஜூன் 10 – காகாசான் ரும்புன் சிலாங்கூர் பயணத் தொடர்
இயக்கம் எதிர்வரும் ஜூன் மாதம் 19 முதல் 21 வரை பெட்டாலிங்
மாவட்டத்தில் நடைபெறும் என்று ஒற்றுமைத் துறைக்கான ஆட்சிக்குழு
உறுப்பினர் டத்தோ ரிஸாம் இஸ்மாயில் தெரிவித்தார்.

இந்த தொடரின் நான்காவது நிகழ்வான இது நகர்ப்புற மக்களின்
தேவையை பூர்த்தி செய்யும் விதமாகச் சற்று மாறுபட்ட நிகழ்வுகளுடன்
நடைபெறும் என்று அவர் சொன்னார்.

பொது மக்களைச் சந்திப்பதற்காக மேன்மை தங்கிய சிலாங்கூர் ராஜா
மூடா தெங்கு அமீர் ஷா ரும்புன் சிலாங்கூர் நிகழ்விலும் கலந்து
கொள்வதாக அவர் கூறினார்.

இந்த முறை நிகழ்வு சற்று மாறுபட்டுள்ளது. கலாசாரத்தை
அடிப்படையாகக் கொண்ட நிகழ்வுகளோடு உதவித் திட்டங்கள் மற்றும்
வேலை வாய்ப்புகள் தொடர்பான விபரங்களை வழங்கக் கூடிய
கண்காட்சிக் கூடங்களுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது என்று அவர்
தெரிவித்தார்.

நேற்றிவு இங்குள்ள ஸ்ரீ நக்கோடா மண்டபத்தில் நடைபெற்ற சிலாங்கூர்
மாநில நிலையிலான 2024 ஒற்றுமை வார நிகழ்வில் கலந்து கொண்டப்
பின்னர் செய்தியாளர்களிடம் இவ்வாறு குறிப்பிட்டார்.

மாநிலத்தின் பன்முகத் தன்மையை வெளிப்படுத்துவதற்கும் ஒற்றுமையை
வளர்ப்பதற்கும் ஏதுவாக காகாசான் ரும்புன் சிலாங்கூர் திட்டம்
அறிமுகப்படுத்தப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி
கடந்தாண்டு 2024ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல்
செய்த போது கூறியிருந்தார்.

மாநிலத்திலுள்ள அனைத்து ஒன்பது மாவட்டங்களிலும் இந்த ரும்புன்
சிலாங்கூர் நிகழ்வை ஏற்பாடு செய்ய மாநில அரசு 45 லட்சம் வெள்ளியை
ஒதுக்கீடு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

இது வரை இந்த காகாசான் ரும்புன் சிலாங்கூர் திட்டம் உலு சிலாங்கூர்,
உலு லங்காட், சிப்பாங் ஆகிய மாவட்டங்களில் நடத்தப்பட்டுள்ளது.
பெட்டாலிங் மாவட்டத்திற்கு பிறகு ஆண்டு இறுதிக்குள் எஞ்சிய ஐந்து
மாவட்டங்களிலும் இந்த நிகழ்வு நடத்தப்படும்.


Pengarang :