NATIONAL

பொது போக்குவரத்து சேவைகளின் தரமும் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்

கோலாலம்பூர், ஜூன் 11: பொது போக்குவரத்து சேவைகளின் தரத்தையும் உள்ள கட்டமைப்பையும் மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் அரசாங்கம் இப்போது தீவிரமாகக் கவனம் செலுத்துகிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

நேற்று 2024 ஆம் ஆண்டின் தேசிய பொருளாதார நடவடிக்கை கவுன்சில் கூட்டம் 4 இல் இந்த விஷயம் விவாதிக்கப்பட்டது. இதில் முக்கியமாக ரயில் தொழிற்துறையை பெரிய அளவில் நவீனப்படுத்த ஆய்வு செய்யப்பட்டது. இது ரயில் சட்டம் 1991யை (சட்டம் 463) அடிப்படையாகக் கொண்டு தேசிய ரயில் துறையில் சரியான முடிவை உடனடியாக செயல்படுத்துவதன் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டது.

“கேடிஎம் பெர்ஹாட் வழங்கும் கேடிஎம் கொமியூட்டர், நகரங்களுக்கு இடையேயான அதிவேக ரயில்கள் மற்றும் எக்ஸ்பிரஸ் திமுரான் சேவை ஆகியவை தற்போதைய பயணிகளின் எண்ணிக்கை மற்றும் எதிர்கால எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் என்பதை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது” என்று அவர் முகநூல் பதிவில் கூறினார்.

ஒவ்வொரு முடிவும் உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய கொள்கை மற்றும் அமலாக்கப் பிரச்சனைகளின் முக்கியத்துவத்தையும் நிதி அமைச்சராகவும் இருக்கும் அன்வார் வலியுறுத்தினார்.

அரசாங்கத்தின் பொருளாதாரம் மற்றும் சமூக நோக்கங்களையும் விளைவுகளையும் மக்கள் குறித்த காலத்தில் உணர்வதை உறுதிப்படுத்த வேண்டும் என அவர் கூறினார்.

மேலும். தீபகற்பத்தில் டீசல் மானியம் அமுல்படுத்தப்பட்ட முன்னேற்றங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது மற்றும் https://budimadani.gov மூலம் செயல்படுத்தப்படும் “BUDI“ தனிநபர் மற்றும் “BUDI“ விவசாயப் பொருட்கள் பண உதவி விண்ணப்பங்களின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு குறித்து கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

நேற்று முதல் தகுதியான நபர்களின் வங்கிக் கணக்குகளில் ரிம200 செலுத்தப்படும் என்று பிரதமர் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :