NATIONAL

நீர்த் துறையின் நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்காக RM4.59 பில்லியன் ஒதுக்கீடு 

புத்ராஜெயா, ஜூன் 14 – மலேசியாவின் நீர்த் துறையின் நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்காக 484 திட்டங்களைச் செயல்படுத்த RM4.59 பில்லியனை எரிசக்தி மாற்றம் மற்றும் நீர் விநியோக அமைச்சகம் (பெட்ரா) ஒதுக்கியுள்ளது.

ஒரு நிலையான நீர் தொழிலை அடைய அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களை நிறைவேற்றுவதற்கு அதன் உறுதிப்பாட்டை அறிக்கை ஒன்றின் மூலம் உறுதிப்படுத்தியது (பெட்ரா) எனப்படும்  அமைப்பு.

“இது மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு பங்களிக்கும் மற்றும் மக்களுக்கு தரமான நீர் விநியோகத்தை உறுதி செய்யும் ஒரு ஆற்றல்மிக்க அம்சமாக செயல்படும்” என்று அமைச்சகம் கூறியது.

பினாங்கின் பட்டர்வொர்த் நோர்த் நீர்ப் பிடிப்புப் பகுதியில் கழிவுநீர் குழாய் வலையமைப்புகளை நிறுவுவதுடன், செரான்தாவ் மற்றும் மாக் மாண்டினில் பிராந்திய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை (எல்ஆர்கே) நிர்மாணிப்பது முக்கிய திட்டங்களில் அடங்கும்.

வெள்ளத் தணிப்புத் திட்டங்கள் (RTBs) செகாமட்டில் உள்ள சுங்கை மூவார் கட்டம் 3 தொகுப்பு 1 மற்றும் கோத்தா திங்கி, ஜோகூரில் உள்ள சுங்கை ஜோகூர் கட்டம் 1 தொகுப்பு 1 ஆகியவற்றை உள்ளடக்கியது. மேலும், சுங்கை கிள்ளானில் வெள்ளக் கட்டுப்பாடு மற்றும் மூல நீர் விநியோகத்திற்காக இரட்டை நோக்கம் கொண்ட குளங்கள் அமைக்கப்படவுள்ளன.

தற்போதுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் 62,286 மக்கள்தொகைக்கு சமமான (PE) கொள்ளளவைக் கொண்டிருப்பதால், 135,646 பேருக்கு இடமளிக்க முடியாது. எனவே, 214 சதவிகிதம் அதிகமாக இருப்பதால், பினாங்கு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை மேம்படுத்துவது அவசியம் என்றும் பெட்ரா தெரிவித்தது.

“சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் பெருக்கத்தைத் தடுக்கவும், உள்ளூர்வாசிகளின் புகார்களைக் குறைக்கவும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை மேம்படுத்துவது அவசியம். மேலும், 2050 வரை செபராங் பெராய் உத்தாரா நீர்ப்பிடிப்பு சமூகத்திற்கான மையப்படுத்தப்பட்ட கழிவுநீர் சேவைகள் மூலம் சுமார் 250,000 குடியிருப்பாளர்கள் பயனடைவார்கள்” என்று பெட்ரா தெரிவித்தது.

இதற்கிடையில், செகாமட், கோத்தா திங்கி மற்றும் கிள்ளான் ஆகிய இடங்களில் வெள்ளப்பெருக்கைக் குறைக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும், சொத்து சேதத்தைக் குறைக்கவும், பொது உள்கட்டமைப்பைப் பாதுகாக்கவும் வெள்ளத் தணிப்புத் திட்டங்கள் முக்கியமானவை என்று அது கூறியது.

– பெர்னாமா


Pengarang :