SELANGOR

ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு மாடு மற்றும் ஆடுகளை மாநில அரசு வழங்கியது

ஷா ஆலம், ஜூன் 14: இந்த ஆண்டு ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு மாடு மற்றும் ஆடுகளை நன்கொடையாக வழங்கும் நடைமுறையை மாநில அரசு தொடர்கிறது.

மேலும், 6 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்து, 1,000 ஆடுகள் மற்றும் 700 மாடுகளை நன்கொடையாக மாநிலம் முழுவதும் உள்ள மசூதிகள் மற்றும் சூராவ்களிடம் ஒப்படைத்ததாக டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

“சிறந்த வழிபாட்டிற்காக மாநில அரசு மாடுகளுக்குக் குறைந்தபட்ச எடை 270 கிலோ மற்றும் ஆடுகளுக்கு 100 கிலோ போன்ற நிபந்தனைகளை விதித்துள்ளது” என்று அவர் முகநூலில் தெரிவித்தார்.

கடந்த ஆண்டுகளைப் போல் ஹஜ்ஜூப் பெருநாளுக்கு பங்களிப்பதை அரசு நிர்வாகம் தவறவிடவில்லை என்றும், அதன் பலன்கள் தேவைப்படும் முஸ்லிம்களால் உணரப்படும் என்று நம்புவதாகவும் அவர் மேலும் விளக்கினார்.

முன்னதாக, 22 நிறுவனங்கள் கால்நடைகளை வழங்குவதாகவும், மேலும் 25 நிறுவனங்கள் வழிபாட்டிற்கு ஆடுகளை வழங்குவதாகவும் விவசாய ஆட்சிக்குழு உறுப்பினர் கூறினார்.

இதில் எம்பிஐ, சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழகம் மற்றும் பெர்மோடாலன் நெகிரி சிலாங்கூர் பெர்ஹாட் போன்ற மாநில துணை நிறுவனங்களும் அடங்கும்.


Pengarang :