NATIONAL

ஃபைசால் மீது எரிதிராவம் வீசப்பட்டதற்கான காரணம் இன்னும் கண்டறிப்படவில்லை

கோலாலம்பூர், ஜூன் 14 – சிலாங்கூர் எஃப்.சி. மற்றும் ஹரிமாவ் மலாயா
கால்ந்து குழுக்களின் முன்னணி ஆட்டக்காரரான ஃபைசால் ஹலிம் மீது
எரிதிராவக தாக்குதல் நடத்தப்பட்டதற்கான காரணம் இன்னும்
கண்டறியப்படவில்லை.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு
வருவதாகக் கூறிய புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின்
இயக்குநர் டத்தோஸ்ரீ சுஹைலி முகமது ஜைன், குற்றவாளி பிடிபடும்
வரை விசாரணை தொடரும் என்றார்.

தற்போது இரண்டாம் கட்டத்தை எட்டியுள்ள விசாரணையின்
கோணங்களை காவல் துறையினர் விரிவுபடுத்தியுள்ளனர் என்று அவர்
குறிப்பிட்டார்.

கைரேகை மற்றும் போட்டோ ஃபிட் எனப்படும் முக வரைபடம்
விசாரணையில் பெரிதாக உதவி செய்யவில்லை. மேலும், சம்பவத்தை
நேரில் பார்த்த சாட்சிக்கள் யாரும் இல்லாதது விசாரணையில்
பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் சொன்னார்.

தாக்குதல் பாணியை போலீசார் இதுவரை அடையாளம் கண்டுள்ளனர்.
எனினும், ஃபைசால் மற்றும் இதர விளையாட்டாளர்களுக்கு எதிராக
நடத்தப்பட்ட தாக்குதலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை
என்றார் அவர்.

மலேசிய கால்பந்து சங்க அலுவலகத்தைச் சேர்ந்த சிலரிடம் தாங்கள்
வாக்குமூலம் பதிவு செய்துள்ளதோடு பாதிக்கப்பட்ட ஃபைசால் ஹலிமுடன்
விரைவில் சந்திப்பு நடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தாக்குதல் சம்பவம் நிகழ்ந்த முதலாவது வாரத்தின் போது மட்டுமே
போலீசார் தம்மைத் தொடர்பு கொண்டதாக ஃபைசால் கூறியுள்ளது குறித்து
வினவப்பட்ட போது, இது குறித்து மேலும் விபரங்களைப் பெற தாம் சிலாங்கூர் மாநில காவல் துறையைத் தொடர்பு கொள்ளவுள்ளதாகச் சொன்னார்.

கடந்த மே மாதம் 5ஆம் தேதி பெட்டாலிங் ஜெயாவிலுள்ள பேரங்காடி
ஒன்றில் அடையாளம் தெரியாத நபர்களால் ஃபைசால் எரிதிராவகத்
தாக்குதலுக்கு ஆளானர்.


Pengarang :