NATIONAL

பராமரிப்பாளர் கண்காணிப்பிலிருந்த பெண் குழந்தையின் இடது கை உடைந்து தலையில் ரத்தம் காயம் ஏற்பட்டது

சுகாய், ஜூன் 14: பாயா பெரெஞ்சூட், கெமாமானில் பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த ஐந்து மாத பெண் குழந்தையின் இடது கை உடைந்து தலையில் ரத்தம் காயம் ஏற்பட்டது.

பாதிக்கப்பட்ட குழுந்தையின் தாயார், காலை குழந்தையை பராமரிப்பாளரின் வீட்டிற்கு அனுப்பிய பின்னர் இச்சம்பவம் நடந்ததாக கெமாமன் மாவட்ட காவல்துறை தலைவர் ஹன்யான் ரம்லான் தெரிவித்தார்.

“காலை 11 மணியளவில், குழந்தைக்குக் காய்ச்சல் இருப்பதாகக் தாயாருக்குக் பராமரிப்பாளரிடமிருந்து அழைப்பு வந்தது. உடனே, அவர் பராமரிப்பாளர்களின் இல்லத்திற்கு விரைந்தார். அங்கு அவரது குழந்தை சுயநினைவு இன்றி இருப்பதைக் கண்டு, உடனடியாக கெமாமான் மருத்துவமனைக்குப் பரிசோதனைக்காக அழைத்துச் சென்றார்,” என்று ஹன்யான் ரம்லான் கூறினார்.

பின்னர் நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் இச்சம்பவம் தொடர்பாக மருத்துவ அதிகாரியிடமிருந்து காவல்துறையினர் புகாரைப் பெற்றனர். மேலும் பாதிக்கப்பட்ட குழுந்தை தற்போது நல்ல நிலையில் இருப்பதாகவும், கண்காணிப்பு மற்றும் சிகிச்சைக்காக வார்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் சாட்சியமளிக்க பராமரிப்பாளர் அழைக்கப்படுவார் என்றும், குழந்தைகள் சட்டம் 2001 இன் பிரிவு 31(1) இன் கீழ் வழக்கு விசாரிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :