NATIONAL

முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து கட்டுப்பாட்டில் உள்ளது- பயணத்தைச் சீராக்க ஸ்மார்ட்லேன் திறப்பு

கோலாலம்பூர், ஜூன் 16- நாளை கொண்டாடப்படவிருக்கும் ஹஜ்ஜூப
பெருநாளை முன்னிட்டு பொது மக்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பும்
நிலையில் நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளில் கிள்ளான்
பள்ளத்தாக்கிலிருந்து வெளியேறும் தடத்தில் வாகனப் போக்குவரத்து
சீராக உள்ளது.

இன்று காலை 10.00 மணி தொடங்கி வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை (பிளஸ்)
மற்றும் கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்து
அதிகரித்த போதிலும் அவ்விரு நெடுஞ்சாலைகளிலும் போக்குவரத்து சீராக
உள்ளதாக மலேசிய நெடுஞ்சாலை வாரியத்தின் பேச்சாளர் கூறினார்.

சொந்த ஊர்களுக்குச் செல்வோரின் வசதிக்காக நெடுஞ்சாலையின் சில
பகுதிகளில் ஸ்மார்ட்லேன் எனப்படும் அவசரத் தடம் போக்குவரத்துக்கு
திறக்கப்பட்டுள்ளதாக .அவர் சொன்னார்.

வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் 0.4வது கிலோ மீட்டர் தொடங்கி 6.0
கிலோ மீட்டர் வரையிலான பாண்டான் முதல் கெம்பாஸ் வரையலானப்
பகுதி, கிலோ மீட்டர் 4.5 முதல் கிலோ மீட்டர் 1.9 வரையிலான செத்தியா
டிரோப்பிகா முதல் பாசீர் கூடாங் வரையிலான பகுதி, பண்டார் பாரு
நீலாய் முதல் பண்டார் அய்ன்ஸ்டேல் வரையிலான பகுதியில் இந்த
ஸ்மார்ட்லேன் திறக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் 438.6வது கிலோ மீட்டரின் சுங்கை
புவாயா மற்றும் ரவாங் இடையிலான வடக்கு தடத்திலும் 407.6வது கிலோ
மீட்டரில் லெம்பா பிரிங்கின்-புக்கித் தாகார் இடையிலான தடத்திலும்
விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவித்த அவர், எனினும், இந்த விபத்துகளால்
போக்குவரத்து பாதிக்கப்படவில்லை என்றார்.


Pengarang :