NATIONAL

நெங்கிரி தொகுதி காலியானதாகக் கிளந்தான் சட்டமன்ற சபாநாயகர் அறிவிப்பு

கோத்தா பாரு, ஜூன் 19 – நெங்கிரி சட்டமன்றத் தொகுதி இன்று முதல் காலியானதாக கிளந்தான் சட்டமன்ற சபாநாயகர் டத்தோ முகமது அமார் நிக் அப்துல்லா அறிவித்தார்.

நெங்கிரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முகமது அஜிசி அபு நாயிமிடமிருந்து மாநில அமைப்புச் சட்டத்தின் ஷரத்து (3) அதிகாரம் 31ஏ கீழ் எழுத்துப் பூர்வ அறிக்கை கடந்த ஜூன் 13ஆம் தேதி கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

இது தவிர முகமது அஜிசி உறுப்பிய அந்தஸ்தை இழந்து விட்டதாகப் பெர்சத்து கட்சி கடந்த ஜூன் 12ஆம் தேதி அறிவித்ததன் அடிப்படையிலும் அந்த தொகுதி எதிர்பாராத வகையில் காலியானதாக  அறிவிக்கப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

இன்று இங்குள்ள காம்ப்ளெக்ஸ் கோத்தா டாருள் நாயிம் கட்டிடத்தில் நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில் முகமது அமார் இதனைத் தெரிவித்தார்.

தொகுதி காலியானது தொடர்பில் தேர்தல் ஆணையம் அறிக்கை பெற்ற 60 நாட்களுக்குள் இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று மாநில அமைப்புச் சட்டத்தின் ஷரத்து 4(4) அதிகாரம் 31ஏ பிரிவு கூறுகிறது.


Pengarang :