SELANGOR

எஸ்பிஎம் 2023யில் சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பரிசு பெற விண்ணப்பிக்கலாம் – லெம்பா ஜெயா தொகுதி

ஷா ஆலம், ஜூன் 19: லெம்பா ஜெயா தொகுதியில் எஸ்பிஎம் 2023யில் சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பரிசு பெற விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

எஸ்பிஎம் தேர்வில் 7A மற்றும் அதற்கு மேல் பெற்ற மாணவர்கள் சமூக சேவை மையத்திற்கு வந்து விண்ணப்பிக்கலாம் என சட்டமன்ற உறுப்பினர் சையட் அகமட் சையட் அப்துல் ரஹ்மான் அல்ஹதாட் தெரிவித்தார்.

” ஹஜ்ஹூப் பெருநாளுக்குப் பிறகு, சிறந்த மாணவர்களுக்கான பாராட்டு விழாவை ஏற்பாடு செய்வோம். அவர்களின் முடிவுகளின் அடிப்படையில் அவர்களுக்கு ரொக்கம் வழங்கப்படும்.

“லெம்பா ஜெயா தொகுதியில் சிறந்த எஸ்பிஎம் மாணவர்கள் தங்கள் முடிவு சீட்டுகளை சமூக சேவை மையத்திற்குக் கொண்டு வருவதன் மூலம் விண்ணப்பிக்க நாங்கள் வரவேற்கிறோம்,” என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

மேலும் தகவலுக்கு, 018-247 0897 அல்லது லெம்பா ஜெயா தொகுதியின் சமூகச் சேவை மையத்தை நேரடியாக தொடர்பு கொள்ளவும்.


Pengarang :