SELANGOR

எஸ்பிஎம்யில் சிறந்து தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வெகுமதி

ஷா ஆலம், ஜூன் 19: ஶ்ரீ செத்தியா தொகுதியில் எஸ்பிஎம்யில் சிறந்து தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அவர்களின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் பண வெகுமதி வழங்கப்படும்.

இந்த திட்டத்திற்கு குறைந்தபட்சம் 5A பெற்ற மாணவர்கள் ஜூன் 30 வரை விண்ணப்பம் செய்யலாம் என்று முகநூல் மூலம் சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

அத்தொகுதியின் சமூக சேவை மையம் மூலம் 5A (RM150), 6A (RM200), 7A (RM250) 8A (RM300), 9A (RM350) மற்றும் 10Aக்கு RM500 வழங்கப்படும் என்று டாக்டர் முகமட் ஃபஹ்மி நகா கூறினார்.

பெற்றோரில் ஒருவர் அத்தொகுதியின் வாக்காளராக இருக்க வேண்டும். மேலும், எஸ்பிஎம் முடிவுகள் மற்றும் மாணவர், பெற்றோர்களின் அடையாள அட்டைகளின் அசல் மற்றும் நகல்கள் ஆகியவற்றை வழங்குவதும் தகுதி நிபந்தனையாகும்.

உறுதிப்படுத்தல் சந்திப்புக்குத் தொகுதியின் சமூக சேவை மையத்தை 018-2060359 (வாட்ஸ்ஆப்) ஐ என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


Pengarang :