SELANGOR

 2,600க்கும் மேற்பட்டோர் சிலாங்கூர் சிறப்பு குழந்தைகள் உதவித் திட்டத்திற்கு (அனிஸ்) விண்ணப்பித்துள்ளனர்

ஷா ஆலம், ஜூன் 20: விண்ணப்பங்களுக்கான இறுதித் தேதியான மே 31 பிறகும் 2,600க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை சிலாங்கூர் சிறப்பு குழந்தைகள் உதவித் திட்டம் (அனிஸ்) பெற்றுள்ளது.

சிறப்புக் குழந்தைகளைப் பராமரிக்கும் சுமையைக் குறைக்கும் வகையில், குறைந்த திறன் கொண்ட குடும்பங்களுக்கான தகுதிகள் மற்றும் முன்னுரிமைகளை தனது தரப்பு மதிப்பீடு செய்து வருவதாக யாயாசான் வாரிசான் அனாக் சிலாங்கூர் (யாவாஸ்)இன் உதவி நிறுவன தகவல் தொடர்பு மேலாளர் கூறினார்.

“மொத்தம் 2,655 இணைய விண்ணப்பங்களைப் பெற்றுள்ளோம். பல பெற்றோர்கள் அரசின் உதவியைப் பற்றி அறியத் தொடங்கியுள்ளனர் என்பதை அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பங்கள் நிரூபிக்கின்றன.

“முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை மட்டுமே பரிசீலிக்கிறோம். கடந்த ஆண்டு 500 பெறுநர்களுக்கு மட்டுமே இந்த உதவி வழங்கப்பட்ட நிலையில், இவ்வாண்டு அந்த எண்ணிக்கையை 1,000யாக மாநில அரசு உயர்த்தியுள்ளது” என்று ஷரிசான் முகமட் ஷெரீப் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

அனிஸ் உதவியானது ஒரு குடும்பத்திற்கு RM5,000 வரை அதிகபட்ச வரம்புடன் ஒரு முறை செலுத்தப்படும்.

பெற்றோர் அல்லது பாதுகாவலர்களால் சுமக்கப்படும் சிறப்புக் குழந்தைகளுக்கான சிகிச்சை, மறுவாழ்வு, கல்வி மற்றும் வாழ்வாதாரத்திற்கான (துணை உணவு/மருந்து) செலவை எளிதாக்குவதே இந்த உதவியின் முக்கிய நோக்கமாகும்.

அடுத்த மாதம் முதல் வாரத்தில், விண்ணப்ப நிலையை www.anisselangor.com/bantuananis என்ற இணையத்தளத்தில் சரிபார்க்கலாம்.


Pengarang :